மாமியார்-மருமகள் ஒருவருக்கொருவர் சோறு ஊட்டிக்கொண்டால் காசே வேண்டாம்: பிரபல ஓட்டல் அசத்தல் ஆஃபர்

கோப்புப்படம்

  • Share this:
மாமியார் - மருமகள் ஒருவொருக்கொருவர் சோறு ஊட்டிக்கொண்டால் 100 சதவீதம் காசு இலவசம் என்று பிரபல ரெஸ்டாரண்ட் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கக் கூடிய வேதாஸ் ரெஸ்டாரன்ட் மகளிர் தினத்தை முன்னிட்டு அதிரடி ஆஃபர் ஒன்று வெளியிட்டுள்ளது அதில் வேதாஸ் ரெஸ்டாரண்டுக்கு மாமியார்-மருமகள் ஒன்றாக வந்து இருவரும் மாறிமாறி உணவை ஊட்டி கொண்டால் 100% பணமில்லாமல் சாப்பிடலாம் என்ற தள்ளுபடியை அறிவித்துள்ளது.

தொடர்ந்து மாமியார்-மருமகள் சண்டை என்று சீரியல்களில் பார்க்கும் நமக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு இதுபோன்ற வித்தியாசமான தள்ளுபடி அறிவிப்புகளை பார்க்கும் போது ஒருவித நகைச்சுவை ஏற்படுகிறது. இருந்தாலும் இது ஒரு சிறந்த முயற்சி என சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக விமர்சித்து வருகின்றனர்.

மகளிர் தினமான நாளை(மார்ச் 8) தேதி துவங்கி 15-ம்தேதி வரை இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மாமியார் அவர்களுடைய மருமகளுடன் சேர்ந்து உணவகத்திற்கு சென்று உணவை ஆர்டர் செய்து இருவரும் மாறி மாறி பகிர்ந்து கொண்டால் 100% பணம் செலுத்தாமல் தேவையான உணவை சாப்பிடலாம்.
Published by:Vijay R
First published: