காதலுக்கு எல்லையோ தடையோ கிடையாது. காதல் என்பது ஒரு நபரின் மீது தான் வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தன்னை தானே மணந்து கொண்டவர், தனது போர்வையை மணந்தவர் என்று பலரது கதையை கேட்டிருப்போம். ஆனால் காதலின் நகரம் என்று சொல்லப்படும் பாரிசில் உள்ள ஈபிள் டவரை ஒருவர் காதலித்தார் என்று சொன்னால் நகைச்சுவை என்று நினைப்பார்கள். ஆனால் 10 ஆண்டுகள் காதலித்து ஈபிள் டவரை மணந்த ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
உண்மைதான் 16 ஆண்டுகளுக்கு முன்பு எரிக்கா லேப்ரி என்ற பெண் ஈபிள் டவரை மணந்ததாக அறிவித்தார். தன் பாலின ஈர்ப்பாளர்களைப் போலவே ஆப்ஜெக்டம் செக்சுவல் Objectum Sexual என்ற பிரிவு மக்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உயிருள்ள மனிதர்கள் மீது எந்த உணர்ச்சியும் ஏற்படாது. அதற்கு பதிலாக உயிரற்ற பொருட்களின் மீது ஈர்ப்பு இருக்கும்.
சின்ன குழந்தைகளுக்கு கூட பொம்மைகள் என்றால் பிடிக்கும். அந்த பொருளின் மீது விருப்பம் இருக்கும். இதில் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம். ஒரு பொருளை பிடித்து அதை தான் வைத்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இயற்கையானதே. ஆனால் அந்த பொருள் தான் எனது வாழ்க்கை. அது இல்லாமல் வாழ முடியாது என்று யாருக்கும் எளிதில் தோன்றிவிட்டது. ஒன்று உடைந்து விட்டால் அடுத்ததை நோக்கி போய் விடுவோம்.
ஆனால் ஆப்ஜெக்டம் செக்சுவல் கொண்டவர்களுக்கு அந்த பொருட்களின் மீது காதல் வரும். அதை தனது வாழ்க்கை துணையாக ஏற்கும் மனநிலை ஏற்படும். அந்த பொருளில் தான் தங்களது காதலை காண்பார்கள். சாதாரண மக்களுக்கு வெறும் பொருளாக தெரியும். ஆனால் அவர்களுக்கு அது ஒரு மகத்தான உணர்வு.
அப்படி தான் எரிக்கா லேப்ரியும் இருந்துள்ளார். இதன் காரணமாக சிறுவயதில் இருந்து பல கேளிக்கை பேச்சுகளுக்கு உள்ளாகியுள்ளார். எரிகா தனது குழந்தைப் பருவத்திலிருந்தே ஈபிள் டவர் மீதான அவரது விருப்பத்தைப் பற்றி அறிந்திருந்தார். ஆனால் இளமைப் பருவம் வரை, அதை பற்றி யாரிடமும் ஏதும் சொல்லவில்லை.
மற்றவர்கள் டேட்டிங் செய்யத் தொடங்கியபோது, அவர் ஈபிள் டவர் மீது ஆழமான உணர்வுகளை வளர்க்கத் தொடங்கினார்.இப்படியே போக கடந்த 2007 இல் தனது 10 ஆண்டு கால காதலான ஈபிள் டவரை திருமணம் செய்வதாக அறிவித்தார்.
இதையும் படிங்க: பிரேக்-அப் ஆன காதலர்களின் நினைவுப் பரிசுகளை பொக்கிஷமாக பாதுகாக்கும் மியூசியம் : எங்க இருக்கு தெரியுமா.?
அதோடு தனது பெயரை எரிக்கா ஈபிள் என்று கூட மாற்றினார். ஆனால் தற்போது ஈபிள் டவர் மீதான காதல் வேலியின் மீது மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். 16 ஆண்டு கால காதல் முறிவை ஈபிள் டவர் எப்படி தாங்க போகிறது என்று தான் தெரியவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Eiffel Tower, Travel