வடிவேலு முதல் நஸ்ரியா வரை... பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் என்ஜாயி எஞ்சாமி பாடல்!

வடிவேலு முதல் நஸ்ரியா வரை... பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் என்ஜாயி எஞ்சாமி பாடல்!

என்ஜாயி எஞ்சாமி பாடல்

என்ஜாயி எஞ்சாமி பாடல் பட்டி தொட்டியெங்கும் வைரலாகி வருகிறது. பலரும் இந்த பாடலை பாடியும், ஆடியும் தங்கள் இணையதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். 'நான் 5 சேனல் வச்சிருந்தேன் அழகா வீடியோ பண்ணேன்' என யூடியூபர் கோபி, சுதாகர் பாடியது பலரையும் நகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

 • Share this:
  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் வெளியான ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ பாடலான என்ஜாயி எஞ்சாமி பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

  இதுவரை யூ-ட்யூபில் 45 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல் தொடங்கி மீம்ஸ் வரை எங்கும் ’என்ஜாயி எஞ்சாமி’ பாடல் தான் தற்போதைய ட்ரெண்ட். நடிகர்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடிப் தங்களது இணையதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

      

   

  நடிகர் நஸ்ரியா தனது தம்பியுடன் சேர்ந்து என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

   

      

   

  இணையவாசிகள் முதற்கொண்டு பலரும் இந்த பாடலை தங்கள் இணையதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

   

      

      

      

      

      

      

   

      

  பலரும் இந்த பாடல் மண்டைக்குள்ள ஓடிக் கிட்டே இருக்கே என்றபடி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

     இதனிடையே 'நான் 5 சேனல் வச்சிருந்தேன் அழகா வீடியோ பண்ணேன்' என பிரபல யூடியூபர் கோபி, சுதாகர் பாடியது பலரையும் நகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: