• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Enjoy Enjaami : எஞ்சாய் எஞ்சாமி பாடலை தனது மழலை குரலில் பாடி அசத்தும் சிறுமி - பாராட்டும் இணையவாசிகள்

Enjoy Enjaami : எஞ்சாய் எஞ்சாமி பாடலை தனது மழலை குரலில் பாடி அசத்தும் சிறுமி - பாராட்டும் இணையவாசிகள்

பாடி அசத்தும் சிறுமி

பாடி அசத்தும் சிறுமி

எஞ்சாய் எஞ்சாமி பாடலை தனது மழலை குரலில் பாடி அசத்தும் சிறுமிக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகின்றது.

  • Share this:
    சுயதீன கலைஞர்களை ஊக்குவிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள ‘மாஜா’ தளத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’. இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாடகர்கள் தீ மற்றும் அறிவு இதனை பாடியுள்ளனர்.

    இந்தப் பாடலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் வெகுவாக கொண்டாடி வர்கிறார்கள். குறிப்பாக என்ஜாய் எஞ்சாமி பாடலை ஆடி - பாடி குழந்தைகளின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன.

     



     

    இதனிடையே தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வெளியில் செல்வோர் முகக்கவசம் அணியவும், பெரும்பாலும் வெளியில் செல்வதை தவிர்க்கவும், கையுறை, முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.



    இந்நிலையில் தற்போது கேரளா போலீசார் தங்களது முகநூல் பக்கத்தில் எஞ்சாய் எஞ்சாமி பாடலை ரீமேக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



    இது ஒரு புறம் இருக்க சிறுமி ஒருவர் தனது அழகான மழலை குரலில் எஞ்சாய் எஞ்சாமி பாடலை பாடும் வீடியோவிற்கும் இணையத்தில் லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றது. சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், குழந்தைகள், காவல்துறையினர், வெளிநாட்டினர் என பட்டிதொட்டியெங்கும் இப்படல் தற்போது வரை பட்டையை கிளப்பி வருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: