பனங்கிழங்கு போன்ற தமிழ் இயற்கை உணவை சாப்பிடுங்க... தமிழிலேயே அறிவுறுத்தும் வெள்ளைக்கார இளைஞர்

News18 Tamil
Updated: November 1, 2019, 11:33 PM IST
பனங்கிழங்கு போன்ற தமிழ் இயற்கை உணவை சாப்பிடுங்க... தமிழிலேயே அறிவுறுத்தும் வெள்ளைக்கார இளைஞர்
News18 Tamil
Updated: November 1, 2019, 11:33 PM IST
பனங்கிழங்கு போன்ற தமிழ் இயற்கை உணவை சாப்பிடுங்க, முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கோங்க என தமிழ்நாட்டு உணவுகளை சாப்பிட  தமிழிலேயே அறிவுறுத்தும் வெள்ளைக்கார இளைஞரை நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இங்கிலாந்தைப் பூர்விகமாகக் கொண்ட இளைஞர் கிருஷ்ணா மெகன்சி புதுச்சேரியில் இயற்கை விவசாயத்தில் அசத்தி வருகிறார். தமிழ் கலாசாரத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட இவர் திருவண்ணாமலையை ச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து மணந்துள்ளார். கிருஷ்ணா மெகன்சியின் இயற்பெயர் டங்கன் மெகன்சி.

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு நடத்திய தமிழர் திருநாள் விழா நிகழ்ச்சியில், பேசிய கிருஷ்ணா மெகன்சி இயற்கையான தமிழ் உணவுகள் பற்றியும், உலக சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றியும், தண்ணீர் பிரச்னை, டெல்லி மாசு பிரச்னை என தமிழிலேயே பேசி அசத்தினார். இந்த பேச்சு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
Watch Also:
First published: November 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...