ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நோயின் தீவிரம் தாங்க முடியாமல் நைட்ரஜன் வாயு சுவாசித்து என்ஜினீயர் தற்கொலை!

நோயின் தீவிரம் தாங்க முடியாமல் நைட்ரஜன் வாயு சுவாசித்து என்ஜினீயர் தற்கொலை!

பெங்களூரு இன்ஜினியர் தற்கொலை சம்பவம்

பெங்களூரு இன்ஜினியர் தற்கொலை சம்பவம்

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் பகுதியில் வசித்து வந்த நபர் தனது நோயின் தீவிரம் தாங்க முடியாமல் விஷ வாயு சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bangalore |

விஜயகுமார் என்ற 51 வயது நபர், பெங்களூரில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி  வந்தார்.  மனைவி, பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக இதயம் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்டு  சிகிச்சையும் பெற்று வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் இதய அறுவை சிகிச்சை செய்த பின்னரும் மூச்சுவிடுவதில் சிரமம் உள்பட பல பிரச்சினைகளால்  பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த விஜயகுமார், தனது மனைவியிடம் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார்.  இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அவருக்கு ஆறுதல் கூறி தேற்றியுள்ளார்.

இந்த நிலையில் குருபரஹள்ளியில் உள்ள வாகன பணிமனைக்கு சென்று காரை சுத்தம் செய்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு,  புறப்பட்ட விஜயகுமார், குருபரஹள்ளி  பூங்காவிற்கு அருகில்  காரை நிறுத்திவிட்டு அங்கிருந்த ஒரு நபரை அழைத்து தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும், அதிக வெயில் அடிப்பதால் தான் காருக்குள் சிறிது நேரம் தூங்க இருப்பதாகவும்,  காரை, கவரை கொண்டு மூடும்படியும் கேட்டு கொண்டார்.

இதையும் படிங்க:உள்ளே நோயாளி.. நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்.. 12 கிமீ தள்ளி டோவ் செய்த இருசக்கர வாகன ஓட்டுநர்கள்!

இதனால் அந்த நபரும் காரை கவரால் மூடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதன்பின்னர் காரின் கண்ணாடிகளை அடைத்துவிட்டு  ஏற்கனவே காரில் எடுத்து வந்த நைட்ரஜன்  சிலிண்டரை திறந்துவிட்டுள்ளார். . அது போதாதென்று தனது முகத்தை பாலிதீன் பையால் மூடி மூச்சுவிட முடியாதபடி இறுக்கியுள்ளார்.

நீண்ட நேரமாக கார் ஒரே இடத்தில் நின்றதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் காருக்கு மூடப்பட்டு இருந்த கவரை அகற்றி ஆய்வு செய்தனர். அப்போது காரின் கதவில் ஒரு கடிதம் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில் பொதுமக்கள் யாரும் கார் கவரை திறக்க வேண்டாம். உள்ளே விஷ காற்று இருப்பதால் உங்களுக்கு ஆபத்து  ஏற்படும். போலீசாரின் குழு வந்து  கார் கதவை திறக்க வேண்டும் என்று எழுதி இருந்தார்.

சிறப்பு குழுவை வரவழைத்து காரின் கதவுகளைத் திறந்து  விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இதய நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோதற்கொலை எண்ணம் உண்டானாலோஅதனை மாற்றகீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


First published:

Tags: Bengaluru, Engineer suicide