ம.பியில் அரிய வகை ’மீன்பிடி பூனை’ - புகைப்படத்தை வெளியிட்ட வனத்துறை

ம.பியில் அரிய வகை ’மீன்பிடி பூனை’

இந்தப் பூனை எந்த இடத்தில் உலவியது, எப்போது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது போன்ற தகவல்களை வனத்துறை வெளியிடவில்லை.

 • Share this:
  மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் அரிய வகை பூனை இனமான ‘மீன்பிடி பூனை’ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  கடந்த பல தசாப்தங்களாக வன அழிப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள், வேட்    டையாடுதல் காரணமாக வன விலங்குகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. சிறுத்தை, யானை, பறவைகள் மற்றும் பூனை என பல இனங்கள் அழிவுகளை எதிர்நோக்கியுள்ளன. பூனை இனத்தில் ’மீன்பிடி பூனை’ அருகி வரும் இனங்களில் ஒன்றாக உள்ளது. 2016 ஆம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இதனை அழிவின் விளிம்பில் இருக்கும் இனமாக அறிவித்தது. இந்த பூனைகள் பெரும்பாலும் சதுப்பு நிலக் காடுகள் மற்றும் வனப்பகுதிகளுக்குள் இருக்கும் ஆறுகள், நீரோடைகள் ஆகியவற்றின் அருகிலேயே வாழ்விடங்களாகக்கொண்டு வாழும். சாதாரண பூனையை விட இந்தப் பூனைகள் அளவில் இரண்டு மடங்கு பெரியவையாக இருக்கும்.

  மேற்கு வங்க மாநிலத்தின் மாநில விலங்கான மீன்பிடி பூனை, ஒரிசா, கேரளாவில் உள்ள சதுப்பு நிலக் காடுகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் இருப்பதாக கருத்தப்படுகிறது. தற்போது, மத்தியப் பிரதேச மாநிலம், பன்னா புலிகள் காப்பகத்தில் இந்த அரிய வகை பூனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதிக்குள் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் மீன்பிடி பூனையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ள மத்தியப் பிரதேச வனத்துறை, அரிய பூனையின் நடமாட்டம் பன்னா வனப்பகுதிக்குள் இருப்பதை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

  அதேநேரத்தில் இந்தப் பூனை எந்த இடத்தில் உலவியது, எப்போது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது போன்ற தகவல்களை வனத்துறை வெளியிடவில்லை. பன்னா வனப்பகுதியில் மீன்பிடி பூனை இருப்பது, அங்கு அவை வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதை நிரூபிப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்தப் பூனைகளை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் புதிய திட்டம் ஒன்றை வனத்துறை வகுத்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் இமயமலை அடிவாரத்தில் கங்கை மற்றும் பிரமபுத்திரா ஆற்றங்கரையோரங்களிலும் மீன்பிடி பூனைகள் வசிப்பதாக கூறப்படுகிறது.

  பன்னா புலிகள் வனப்பகுதிக்குள் மீன்பிடி பூனை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மற்றொரு வகையில் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, புலிகள் வசிக்கும் வாழ்விடங்களில் மீன்பிடி பூனைகள் இருக்காது என நம்பப்பட்டு வந்தது. ஆனால், புலிகளின் சரணாலயத்திலேயே மீன்பிடி பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, வியப்பிற்கான முக்கிய காரணமாகும்.

  cat viral pic

  2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 10 ஆயிரம் மீன்பிடி பூனைகள் மட்டுமே உலகளவில் இருப்பதாக கூறப்பட்டது. மேற்கு வங்கம் மற்றும் ஒரிசா மாநிலங்களின் மீன்பிடி பூனைகளை கண்டறிய 11 வருட கால திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மீன்கள், மொல்லஸ்க்குகள், ஆர்ரோபாட்கள், சிறிய பாலூட்டிகள் ஆகியவற்றை உணவாக எடுத்துக்கொள்கின்றன.

      

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: