• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • டிராஃபிக் ஜாம் பிரச்சனையை தீர்க்க காற்றில் பறக்கும் ஏர் டாக்ஸியை சோதிக்கும் நாசா!

டிராஃபிக் ஜாம் பிரச்சனையை தீர்க்க காற்றில் பறக்கும் ஏர் டாக்ஸியை சோதிக்கும் நாசா!

காற்றில் பறக்கும் ஏர் டாக்ஸியை சோதிக்கும் நாசா

காற்றில் பறக்கும் ஏர் டாக்ஸியை சோதிக்கும் நாசா

படிப்படியான சோதனைகள் மூலம் எதிர்காலத்தில், eVTOL ஏர்கிராஃப்ட் நாடு முழுவதும் நகரங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஏர் டாக்ஸிகளாக சேவை செய்ய முடியும்.

 • Share this:
  உலகம் முழுவதும் உள்ள பொதுவான போக்குவரத்து பிரச்சனைகளில் ஒன்று டிராஃபிக் ஜாம். உலகளாவிய இந்த சிக்களுக்கான ஒரு தீர்வை நோக்கி நாசா பயணம் செய்து கொண்டிருக்கிறது. மக்களை போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் இருந்து காப்பாற்ற அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக நாசா நிறுவனம் எலெக்ட்ரிக் வெர்டிகள் டேக்ஆஃப் அன்ட் லேண்டிங் (electric vertical takeoff and landing - eVTOL) ஏர்கிராஃப்ட்டை டெஸ்ட்டிங் செய்து வருகிறது. புரியும்படி எளிமையாக சொல்வதென்றால் வழக்கமாக தரையில் ஓடும் டாக்ஸிகளை போல, பயணிகளை ஏற்றி கொண்டு வானில் செல்லக்கூடிய ஏர் டாக்ஸிகளை தான் நாசா டெஸ்ட்டிங் செய்ய தொடங்கி உள்ளது.

  இதற்கான சோதனை ஓட்டம் கலிபோர்னியாவின் பிக் சுர் அருகில் அமைந்துள்ள ஜோபிஸ் எலெக்ட்ரிக் பிளைட் பேஸில் (Joby’s Electric Flight Base ) அண்மையில் நடைபெற்றது. இதன் மூலம் பறக்கும் டாக்ஸிகளை ஒரு யதார்த்த நடைமுறையாக மாற்ற நாசா ஒரு முக்கியமான படியை முன்னெடுத்துள்ளது. நாசாவின் சமீபத்திய செய்தி குறிப்பில்,தங்களது ஏஜென்சியின் மேம்பட்ட ஏர் மொபிலிட்டி (ஏஏஎம்) தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கலிபோர்னியாவில் ஜோபி ஏவியேஷனின் eVTOL விமானம் மூலம் சோதனை செய்ய துவங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  படிப்படியான சோதனைகள் மூலம் எதிர்காலத்தில், eVTOL ஏர்கிராஃப்ட் நாடு முழுவதும் நகரங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஏர் டாக்ஸிகளாக சேவை செய்ய முடியும். மேலும் இந்த சோதனை முயற்சி பயணிக்கும் மக்கள் மற்றும் சரக்கு பொருட்களை கொண்டு செல்ல மற்றொரு போக்குவரத்து முறையை நம்முடன் சேர்க்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் அடுத்தடுத்து நடைபெற உள்ள இது மாதிரியான டெஸ்டிங்கின் போது, ஏர்கிராஃப்ட்டிலிருந்து நாசா தொடர்ந்து டேட்டாக்களை சேகரிக்க உள்ளது. இது எதிர்காலத்தில் கமர்ஷியல் பேசஞ்சர் சர்வீஸ்காக பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் eVTOL ஏர்கிராஃப்ட் திட்டமிட்ட டெஸ்ட்டிங்கில் பறந்த போது, நாசாவின் மேம்பட்ட ஏர் மொபிலிட்டி தேசிய பிரச்சாரக் குழு (NASA's Advanced Air Mobility National Campaign team ) குறிப்பிட்ட ஏர்கிராஃப்ட் எப்படி நகர்ந்து சென்று பறக்க துவங்கியது, பறக்கும் போது அதிலிருந்து வந்த ஒலி எப்படி இருந்தது, பறந்த சமயத்தில் ஏர்கிராஃப்ட்டானது தரையில் இருந்த கட்டுப்பாட்டாளர்களுடன் எப்படி தொடர்பு கொண்டது என்பது போன்ற பல அடிப்படைகளை கூர்ந்து கவனித்து. இது தொடர்பான டேட்டாக்களை சேகரித்து கொண்டனர்.

  Also read... ’பூமியின் நீலப்பெட்டிகள்’ நாசா வெளியிட்ட கண்கவர் புகைப்படம்..

  இந்த ஏர் டாக்ஸியின் ஒலி தொடர்பான சோதனைக்காக குறைந்தது 50 மைக்ரோஃ போன்கள் அதில் நிறுவப்பட்டிருந்தன. மேலும் eVTOL ஏர்கிராஃப்ட் 90 டிகிரியில் காற்றில் புறப்பட்டு தரையில் தரையிறங்கும். இது வரும் 2024-க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிமுகப்படுத்தப்பட்டால் சர்வதேச விமானத் துறை மற்றும் போக்குவரத்தில் இது ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.

  இந்த திட்டத்திற்காக சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாசா ஆய்வாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இது நகரங்களுக்கு இடையே பறக்க போகும் "வெற்றிகரமான பறக்கும் கார்"என்று நாசா கூறி இருக்கிறது. இந்த திட்டம் முழுவடிவம் பெற்று செயல்பட துவங்கும் போது இதன் அமைப்பில் பேக்கேஜ் டெலிவரி ட்ரோன்கள், ஏர் டாக்ஸிகள் மற்றும் மருத்துவ போக்குவரத்து வாகனங்கள் போன்ற ஏர்கிராஃப்ட்களும் இருக்கலாம் என்று நாசா கூறி உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vinothini Aandisamy
  First published: