முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 2020ம் ஆண்டில் மக்களின் மனநிலையை உணர்த்தும் புதிய எமோஜிகள் அறிமுகம்

2020ம் ஆண்டில் மக்களின் மனநிலையை உணர்த்தும் புதிய எமோஜிகள் அறிமுகம்

2020ம் ஆண்டில் மக்களின் மனநிலையை உணர்த்தும் புதிய எமோஜிகள் அறிமுகம்

2020ம் ஆண்டில் மக்களின் மனநிலையை உணர்த்தும் புதிய எமோஜிகள் அறிமுகம்

2020ம் ஆண்டில் நம் மனநிலையை உணர்த்தும் விதத்தில் புதிய எமோஜிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

2020ம் ஆண்டின் நிலையை சிறப்பாக விவரிக்கும் எமோஜிகள் குறித்து நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இனி ஆச்சரியப்பட வேண்டாம், யூனிகோட் கூட்டமைப்பு ஒரு புதிய எமோஜிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அசாதாரண விஷயங்கள் பலவற்றை எதிர்கொண்ட ஆண்டாக 2020 இருப்பதை மிகச் சுருக்கமாக இந்த எமோஜி-க்கள் வெளிப்படுத்துகின்றன. நம் தொலைபேசியின் விசைப்பலகைகளில் (Keyboards/Keypads) வரும் எமோஜிக்களை உருவாக்கிய பிரபல அமைப்பு, இந்த புதிய எமோஜிகளின் தொகுப்பையும் அங்கீகரித்துள்ளது.

அப்படி என்ன இருக்கு இந்த புதிய எமோஜிகளில்?

பொதுவாக நம் உணர்ச்சிகளை அலைபேசி வாயிலாக சிறு முகபாவனை மூலம் வெளிப்படுத்துவதற்கு எமோஜிகள் உதவுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாற்றங்களை நாம் சந்தித்துள்ளோம். அதனை வெளிப்படுத்தும் விதமாக இந்த புதிய எமோஜிகள் அமைந்துள்ளன. இந்த எமோஜிகளில் ஒன்று சுழல் கண்களைக் கொண்ட ஒரு முகம் ஆகும். இது பிரச்னையின் வெளிப்பாடு போன்றும், தான் நலமுடன் இல்லை என்பதை வெளிப்படுத்துவது போன்றும் உள்ளது.

Also read: திருப்பூர் அரசு மருத்துவமனையில் 40 நிமிடம் மின்சாரம் துண்டிப்பு: ஆக்ஸிஜன் தடைபட்டு கொரோனா நோயாளிகள் இருவர் உயிரிழப்பு

அதேபோல, ஒரு நபர் ஹிப்னாடிஸாக அல்லது கட்டுப்பாட்டை இழந்ததைப் போல இருக்கும் எமோஜியும் வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின்போது நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் எப்படி உணர்ந்தோம் என்பதை இது வெளிப்படுத்துகிறது.

யூனிகோட் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த எமோஜிகளின் தொகுப்பு "எமோஜி 13.1" என்று அழைக்கப்படுகிறது. இதையடுத்து புதிதாக 6 எமோஜிக்கள் தொலைபேசி விசைப்பலகையில் (KeyBoard / Keypad ) இணைக்கப்படவுள்ளன. மேலும், 7 எமோஜிகளின் தொகுப்பு 2021ம் ஆண்டில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் நெருப்பு மீது இதயம், கட்டுபோட்டபடி ஒரு இதயம், தாடியுடன் பெண், தாடியுடன் ஆண், சுவாசித்தல் போன்ற முகம் மற்றும் மேகங்களில் ஒரு நபர் போன்றவை அடங்கும்.

தற்போது வெளியாகும் புதிய பதிப்பில் மல்டி-பர்சன் எமோஜிக்கான ஸ்கின் டோன் வகைகளும் இணைக்கப்பட உள்ளன. அவற்றில் இதயங்களுடன் ஜோடிகள் இருப்பது, ஜோடிகள் முத்தமிடுவது போன்ற எமோஜிக்கள் இணைக்கப்படும். இதுதவிர, சுழல் கண்கள் மற்றும் முகம் சுவாசிப்பது போன்று இரண்டு எமோஜிக்களும், 2020ம் ஆண்டில் மக்கள் உணர்ந்ததை விவரிக்க அதிகம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2020ம் ஆண்டு பெரும்பாலான மக்களுக்கு ரோலர் கோஸ்டர் சவாரி போன்றுதான் அமைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, பஜ்ஜன் எண்ணெய் வயல் தீ, அமெரிக்காவில் மேற்கு கடற்கரை தீ என பல்வேறு துயரச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும், அசாமில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பேரழிவு, கேரளாவில் நிலச்சரிவு மற்றும் அமெரிக்காவில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் ஆர்ப்பாட்டங்களுடன், அரசியல் எழுச்சிகளும் இருந்தன.

சீனாவில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்க்கும் ஹாங்காங் போராட்டங்கள் அரங்கேறின. இவை அனைத்தையும் தாண்டி கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி ஒரு ஆட்டம் காட்டி வருகிறது. இதுவரை 31.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இந்த நோய்த்தொற்று காரணமாக மக்கள் அனைவரும் சில மாதங்கள் வீட்டில் முடங்கி இருந்தனர். இதனால் பல்வேறு மன உளைச்சலுக்கும் ஆளாகினர். இதனை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த யூனிகோட் கூட்டமைப்பு புதிய எமோஜிக்களை உருவாக்கியுள்ளது.

First published:

Tags: Emoji