Home /News /trend /

ட்விட்டர் நிறுவனத்தை அலற விட்ட எலான் மஸ்க்... நோட்டீஸ் அனுப்பி பகிரங்க எச்சரிக்கை!

ட்விட்டர் நிறுவனத்தை அலற விட்ட எலான் மஸ்க்... நோட்டீஸ் அனுப்பி பகிரங்க எச்சரிக்கை!

Twitter | கடந்த சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கினார். ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதில் இணைவதற்கு எலான் மஸ்க் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் ...
எலான் மஸ்க்  44 பில்லியன் டாலர் மதிப்பிலான ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்,  ட்விட்டர் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் பற்றிய தரவை முழுமையாக வழங்கத் தவறினால், ட்விட்டரை வாங்குவதற்கான தனது 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இருந்து விலகி விடுவேன் என்று  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை ட்விட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் அனுப்பியுள்ள கடிதத்தில், "இணைப்பு ஒப்பந்தத்தின் கீழ் ட்விட்டர் தனது கடமைகளுக்கு இணங்க வெளிப்படையாக மறுக்கிறது. இது போலிக் கணக்குகள் பற்றிய தரவின் மூலம் மஸ்க்கின் சொந்த பகுப்பாய்வு எதைக் கண்டறியும் என்ற கவலையின் காரணமாக ட்விட்டர் நிறுவனம் தரவை நிறுத்தி வைக்கிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என கடுமையாக ட்விட்டர் நிறுவனத்தை விமர்சித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் சோதனை முறைகள் குறித்த விவரங்களை வழங்க மட்டுமே முன்வந்துள்ளதாக வழக்கறிஞர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால் அது எலான் மஸ்க் கேட்ட போலி கணக்கு தொடர்பான தரவுகளை தர முடியாது என ட்விட்டர் நிர்வாகம் மறுப்பதற்கு சமமானது என வழக்கறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது.

Read More : 3.5 கோடி சம்பளம் - ஆனால் வேலையை தூக்கி எறிந்த Netflix ஊழியர்.. காரணம் என்ன தெரியுமா?

ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஒப்பந்தம் மற்றும் கடமைகளை மீறுவது போல் இருப்பதாகவும், இணைப்பு ஒப்பந்தத்தை முறித்து கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் எலான் மஸ்க்கிடம் இருப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடிவெடுத்ததில் இருந்தே ட்விட்டரில் வார்த்தை போர் வெடித்து வருகிறது. ட்விட்டர் ஊழியர்களுக்கு கட்டுப்பாடு, எடிட் பட்டன், எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, ட்விட்டர் ப்ளூ டிக் என அடுத்தடுத்து எலான் மஸ்க் பல சர்ச்சைகளை கிளப்பி வந்த நிலையில், ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளை முடக்க வேண்டும் என சமீபத்தில் கோரிக்கை விடுத்தார். தற்போது போலிக் கணக்குகளின் விவரங்களை முழுமையாக தராவிட்டால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட்டு விடுவேன் என சவால் விடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கினார். ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதில் இணைவதற்கு எலான் மஸ்க் மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து 44 ஆயிரம் கோடி டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை தானே வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாக ட்விட்டரிலே அறிவித்தார், அதனை தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது போலி கணக்குகளை கொடுக்காவிட்டால் ஒப்பந்தத்தையே ரத்து செய்துவிடுவேன் என எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளது ட்விட்டர் பங்குதாரர்கள் இடையே புயலை கிளப்பியுள்ளது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Elon Musk, Technology, Twitter

அடுத்த செய்தி