ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

''நான் பதவி விலகணுமா.. ஓட்டு போடுங்க..'' ட்விட்டரில் பகீர் கிளப்பிய எலான் மஸ்க்!

''நான் பதவி விலகணுமா.. ஓட்டு போடுங்க..'' ட்விட்டரில் பகீர் கிளப்பிய எலான் மஸ்க்!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

மற்ற சமூக வலைதளங்களின் பதிவுகளை விளம்பரப்படுத்துவதற்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ள ட்விட்டர் கணக்குகளை முடக்குவோம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் எலன் மஸ்க்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நான் பதவி விலக வேண்டுமா?.. இப்படி ஒரு கேள்வியை பதவியில் இருக்கும் யாராவது கேட்பார்களா?.. கேட்டு ஆச்சரித்தை ஏற்படுத்தியிருக்கிறார் ட்விட்டர் சிஇஓ எலன் மஸ்க். ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்னரே சர்ச்சையை தொடங்கிவிட்டார் எலன் மஸ்க். மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகும் சர்சை்சைகள் முடியவில்லை. ஊழியர்களுக்கு பணி நெருக்கடி, ஆட்குறைப்பு, புளூ டிக் சேவைக்கு கட்டணம் என தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வந்தார் மஸ்க். இப்போது வேறு ஒரு புது விதமான சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் அவர். அதனால் தான் அவர் சர்ச்சைகளின் நாயகனாக இருக்கிறார்.

நான் பதவி விலக வேண்டுமா? என்ற கேள்வியை ட்விட்டரில் பதிவிட்டு அதற்கு ட்விட்டர் பயனர்கள் பதில் அளிக்குமாறு கேட்டுள்ளார். அந்த பதிலை தனக்கான வாக்காக தான் எடுத்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார் எலன் மஸ்க். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 35 கோடிக்கும் மேலாக பயனர்களை கொண்டுள்ள சமூக வலைதளம் ட்விட்டர். அதன் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் எலன் மஸ்க் பல்வேறு கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறார். அதில் முக்கியமான ஒரு முடிவை முன்வைத்து தான் தற்போது எலன் மஸ்க் தான் பதவி விலக வேண்டுமா என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.

ட்விட்டரில் கணக்கு வைத்துள்ள பயனர்கள் மற்ற சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மஸ்டோடான்,ட்ருத் சோசியல், ட்ரைபள் போன்றவைகளிலும் கணக்கு வைத்திருக்கிறார்கள். அந்த சமூக வலைதளங்களின் பதிவை ட்விட்டரிலும் ஷேர் செய்கிறார்கள். அதற்குத் தான் ஆப்பு வைக்கப் பார்க்கிறார் எலன் மஸ்க். மற்ற சமூக வலைதளங்களின் பதிவுகளை விளம்பரப்படுத்துவதற்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ள ட்விட்டர் கணக்குகளை முடக்குவோம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் எலன் மஸ்க்.

Read More : டிவிட்டரில் வைரலாகும் புதிர்..! இதை உங்களால் செய்து காட்ட முடியுமா..?

எலன் மஸ்கின் இது போன்ற நடவடிக்கைகளுக்கு கண்டனங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் மஸ்க் ரிஸ்க் எடுப்பதை குறைத்துக் கொள்ளவில்லை. சர்வதேச அளவில் சில பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் கடந்த வியாழக்கிழமை முடக்கப்பட்டன. அதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து அந்த நடவடிக்கை திரும்ப பெறப்பட்டது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் கூட அதிருப்தி தெரிவித்திருந்தார்.

ஊடங்கங்களின் குரல் எந்த வகையிலும் மவுனமாக்கப்படக் கூடாது என்று அண்டோனியோ குட்டரஸ் தனது செய்தி தொடர்பாளர் வழியாக கண்டனத்தை பதிவு செய்திருந்தார். ஆனாலும் கொள்கை மாற்றம் என்ற பெயரில் தொடர்ந்து பல்வேறு அதிரடி முடிவுகளை அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறார் எலன் மஸ்க். அந்த வரிசையில் அடுத்த ஒன்றுதான் தன் பதவி விலகல் பற்றிய எலன் மஸ்கின் ட்விட்டர் பதிவு. எங்கே செல்கிறது எலன் மஸ்கின் பாதை?....

செய்தியாளர் : ரொசாரியோ ராய்

First published:

Tags: Challenge in Twitter, Elon Musk, Trending