ட்விட்டர் உரிமையாளர் ஆனதில் இருந்து எலான் மஸ்க் பற்றிய செய்தி இல்லாத நாளே கழியாது என்று சொல்லும் அளவிற்கு தினம் ஒரு செயலை செய்து வருகிறார். ப்ளூ டிக் பெற கட்டணம் பெறுவது, ஆட்களை வேளையில் இருந்து நீக்குவது என்று சமூக ஊடகத்தில் பரபரப்பை தக்கவைத்துக்கொள்ளும் மஸ்க் அதே வரிசையில் இப்போதும் ஒரு ஆயுதத்தை வீசியுள்ளார்.
ஒரே ஒரு படத்தால் சமூக வலைத்தளத்தையே உறையவைத்துள்ளார் என்று சொல்லலாம். ஆயுதம் என்றால் கத்தியோ கடப்பாரையோ இல்லை. அது ரிவால்வர் துப்பாக்கி. நேற்று மஸ்க் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் தான் அது காணப்பட்டது.
எலான் மஸ்க் தனது ட்விட்டர் பின்தொடர்பவர்களுக்காக தனது படுக்கை மேசையின் புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார். மேஜையில் காஃபின் இல்லாத டயட் கோக்கின் நான்கு கேன்கள் இருந்தன. அதோடு இரண்டு பிரதி துப்பாக்கிகள் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் டெலாவேர் ஆற்றைக் கடக்கும் ஓவியம் போல் தெரிகிறது என்று பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது. வஜ்ரா டோர்ஜே என்று அழைக்கப்படும் பௌத்த சடங்கு பொருளும் இருப்பதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
My bedside table pic.twitter.com/sIdRYJcLTK
— Elon Musk (@elonmusk) November 28, 2022
மஸ்க் டயட் கோக்கின் நீண்டகால ரசிகர் எனபது பலருக்கும் தெரிந்ததே. அதேபோல், துப்பாக்கி உரிமைக்கு ஆதரவாக தனது கருத்தை முன்பே தெரிவித்திருந்தார். பிரதி துப்பாக்கிகள் இருப்பது பல ட்விட்டர் பயனர்களை துப்பாக்கி பாதுகாப்பு பற்றிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். துப்பாக்கியை காட்டி உலகை மிரட்ட முயற்சிக்காரரா இல்லை துப்பாக்கியைக் கொண்டு தான் தன்னை பாதுகாத்துக் கொள்கிறாரா என்ற பேச்சுக்கள் ட்விட்டர் வலைத்தளத்தில் உலா வருகின்றன
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.