விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வரும் அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க், உலகிலேயே நம்பர் ஒன் பணக்காரராக வலம் வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். விரைவில் எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லினியர் என்ற அந்தஸ்தை பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உலக அளவில் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் பிசினஸில் எந்த அளவிற்கு பிசியாக இருக்கிறாரோ அதே அளவிற்கு சோசியல் மீடியாவிலும் ட்ரெண்டிங்கான பிரபலமாக வலம் வருகிறார். தனது பிசினஸ் மற்றும் தனிப்பட்ட தகவல்களை மட்டுமின்றி சோசியல் மீடியாவில் வலம் வரும் பிற நெட்டிசன்களைப் போலவே சமூக பிரச்சனைகள் குறித்து பேசுவது, வெளிப்படையாக கருத்து தெரிவிப்பது என ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகிறார்.
அதேபோல் தன்னைப் பற்றி பரப்பப்படும் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார். தற்போது எலான் மஸ்க் பயன்படுத்திய பழைய விசிட்டிங் கார்டு ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதற்கு எலான் மஸ்க் அடித்துள்ள கமெண்ட் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் "1995ல் எலான் மஸ்க் பயன்படுத்திய விசிட்டிங் கார்டு" என ‘ஜிப் 2’ என்ற நிறுவனத்தின் பெயருள்ள விசிட்டி கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் எலான் மஸ்க்கின் பெயர், தொலைபேசி எண், ஃபேக்ஸ் நம்பர், மெயில் ஐ.டி., முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் “போர்டு தலைவர், தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் இணை நிறுவனர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசிட்டிங் கார்டு தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. இதுவரையில் 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அந்த போட்டோவை பார்வையிட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். இவற்றையெல்லாம் விட அல்டிமேட்டாக தனது ஓல்டு விசிட்டிங் கார்டிற்கு எலான் மஸ்க் கொடுத்துள்ள கமெண்ட் இணையவாசிகளை கவர்ந்திழுத்துள்ளது.
Also Read : பாசத்தின் உச்சம்: கொட்டும் மழையில் குடையாய் மாறி தனது குட்டியை காக்கும் தாய் யானை!
அந்த வைரல் விசிட்டிங் கார்டு பதிவில் எலான் மஸ்க்,"பண்டய காலங்கள்" (Ancient times) என கமெண்ட் செய்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் விதவிதமாக ரியாக்ட் செய்து வருகின்றனர்.
சரி, இந்த விசிட்டிங் கார்டு பற்றி பலருக்கும் பொதுவாக எழும் சந்தேகம் என்னவென்றால், மஸ்க் ஜிப் 2 நிறுவனத்தை எப்போது தொடங்கினார் என்பதுதான்.
Also Read : இந்த படத்தில் நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது.? உங்கள் ஆளுமை பண்புகளை தெரிந்து கொள்ளுங்கள்!
எலான் மஸ்க்கின் முதல் முயற்சியான ஜிப்2 நிறுவனம் 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் செய்தித் தாள்களுக்கான மென்பொருள் தயாரிக்கும் பணியை செய்து வந்தது. அந்த நிறுவனம் தான் எலான் மஸ்க்கை கோடீஸ்வரராக்கியது. ஆம் சில வருடங்கள் அதனை நடத்தி வந்த எலான் மஸ்க், 1999ம் ஆண்டு 305 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அப்போது இருந்த காம்பேக் என்ற கணினி தயாரிப்பு நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். ஜிப் 2 நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது எலான் மஸ்க் அதன் இணை நிறுவனராக இருந்த விசிட்டிங் கார்டு தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.