Home /News /trend /

எலான் மஸ்கின் கல்லூரி கால புகைப்படங்களை ஏலத்தில் விட்ட முன்னாள் காதலி... காரணம் என்ன?

எலான் மஸ்கின் கல்லூரி கால புகைப்படங்களை ஏலத்தில் விட்ட முன்னாள் காதலி... காரணம் என்ன?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் புகைப்படங்களை RR ஆக்ஷன் என்ற இணையத்தளத்தில் ஏலத்திற்காகப் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் குறைந்தது 100 டாலரில் இருந்து தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaAmericaAmerica
    உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவரும் டெஸ்லா நிறுவனத்தின் CEO மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கியவருமான  எலான் மஸ்கின், இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படங்களை அவரது முன்னாள் காதலி ஏலத்திற்கு விட்டுள்ளார். 

    எலான் மஸ்க் 1994இல் கல்லூரில் படிக்கும் போது காதலித்த ஜெனிபர் க்வின் என்ற பெண்மணி தற்போது,  கல்லூரியில் எடுத்த எலான் மஸ்க் புகைப்படங்களை RR ஆக்ஷன் என்ற இணையத்தளத்தில் ஏலத்திற்காகப் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் குறைந்தது 100 டாலரில் இருந்து தொடங்குகிறது.

    ஜெனிபர் க்வின், தற்போது 48 வயது ஆகும் பெண், அமெரிக்காவில் உள்ள தென் கரோலினாவில் வசித்து வருகிறார். இவரின் கணவரின் மகனின் படிப்பு செலவிற்காகத் தனது கல்லூரி பருவத்தில் எலான் மஸ்கை காதலித்த போது எடுத்த புகைப்படங்களை ஏலத்தில் வைத்துள்ளார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில்  இருவரும் படித்துள்ளனர். அப்போது ஒரு வருடமே காதல் உறவில் இருந்ததாக தெரிவித்துள்ளார். மொத்தம் 18 புகைப்படங்களை ஏலத்திற்குக் கொண்டு வந்த ஜெனிபர் க்வின் ஒவ்வொரு படத்தைப் பற்றியும் சிறிய குறிப்பு எழுதிப் பதிவிட்டுள்ளார். 1995இல் எலான் மஸ்க் பாலோ ஆல்டோவிற்கு சென்ற பிறகு இவர்களின் உறவு முடிந்துவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Also Read : மது குடிப்பதை எப்படி அதிகப்படுத்துவது? ஜப்பானின் அடுத்த அதிர்ச்சி ஐடியா

    ஜெனிபர் குறிப்புகளில், எங்களுடைய உறவு இனிமையாக இருந்தது ஆனால் அது மிக நெருங்கியது அல்ல. 1994இல் நாங்கள் சந்தித்தோம், கல்லூரியில் எலான் சீனியர் நான் ஜூனியர். நாங்கள் ஒரே இடத்தில் வசித்ததினால் ஒன்றாக வேலை செய்வோம். அவரின் கூச்ச சுபாவம் எனக்கு மிகவும் பிடித்தது. அவர் எனக்குப் பிடித்த மாதிரி இருந்தார் என்று பல மலரும் நினைவுகளைக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் எலான் மஸ்க் படிப்பில் மிகவும் கவனம் கொண்டவர். எப்போதும் மின்சார கார்களை பற்றித்தான் பேசுவார். கல்லூரிப்படிப்பை அடுத்த படி முன்னேற ஒரு வாய்ப்பாகத்தான் பார்த்தார் என்று கூறியுள்ளார்.

    புகைப்படங்களில் எலான் மஸ்க் நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருந்த தருணங்களைப் பார்க்க முடிகிறது. கல்லூரி படிப்பு அறையில் படிப்பது, கணினியில் வேலை செய்வது, காதலியுடன் இருப்பது போன்றவை இடம்பெற்றுள்ளது. மேலும் எலான் மஸ்க் கைப்பட எழுதிக் கையொப்பமிட்ட வாழ்த்து கடிதமும் ஏலத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெனிபர் என்று எழுதியுள்ளார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Elon Musk, Online Sale, Photos

    அடுத்த செய்தி