Home /News /trend /

எலான் மஸ்க் அம்மாவாக இருந்தாலும் தப்பு தப்பு தான்..! Edit பட்டனை தேடிய மே மஸ்க்..

எலான் மஸ்க் அம்மாவாக இருந்தாலும் தப்பு தப்பு தான்..! Edit பட்டனை தேடிய மே மஸ்க்..

Twitter Elon Musk | டிவிட்டர் பதிவுகளை எடிட் செய்யும் ஆப்சன் தர வேண்டும் என்று பயனாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதை எலான் மஸ்க்கும் பரிசீலனை செய்து வருகிறார்.

Twitter Elon Musk | டிவிட்டர் பதிவுகளை எடிட் செய்யும் ஆப்சன் தர வேண்டும் என்று பயனாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதை எலான் மஸ்க்கும் பரிசீலனை செய்து வருகிறார்.

Twitter Elon Musk | டிவிட்டர் பதிவுகளை எடிட் செய்யும் ஆப்சன் தர வேண்டும் என்று பயனாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதை எலான் மஸ்க்கும் பரிசீலனை செய்து வருகிறார்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் நாம் பதிவிடும்போது, தட்டச்சு தவறுகள் (டைப்பிங் எரர்) அல்லது கவனக் குறைவாக சில தவறுகளை செய்வது இயல்பானது. அந்த பதிவுகளை மீண்டும் எடிட் கொடுத்து நாம் திருத்தி விடுவோம். ஆனால், மிகக் குறுகிய வார்த்தைகளில் மட்டுமே பதிவுகளை அனுமதிக்கும் டிவிட்டர் தளத்தில் இதுவரையிலும் எடிட் ஆப்சன் கிடையாது.

டிவிட்டர் நிறுவனத்தை, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அண்மையில் விலை கொடுத்து வாங்கினார். அவர் டிவிட்டரை வாங்குவதற்கு முன்பாகவே, சில அப்டேட்டுகளை அவர் டிவிட்டரில் செய்ய திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக, பயனாளர்களுக்கு எடிட் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது.

தகவலை தவறாகப் பதிவிட்ட எலான் மஸ்கின் தாயார்

டிவிட்டரில் எடிட் ஆப்சன் இல்லாத சூழலில், நீங்கள் தவறு செய்யும் பட்சத்தில் அதை டெலீட் செய்ய வேண்டும் அல்லது அதற்கு விளக்கம் கொடுத்து மற்றொரு பதிவை பதிவிட வேண்டும் என்பதே தற்போதைய நிலை. டிவிட்டர் பதிவில் ஏதேச்சையாக தவறு செய்வதில் பிரபலங்களும் கூட விதிவிலக்கு அல்ல. அவ்வளவு ஏன், டிவிட்டரின் புதிய உரிமையாளர் எலான் மஸ்க்கின் தாயார் மே மஸ்க்-க்கும் கூட இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார். டெக்னாலஜி எல்லோருக்கும் ஒன்று தானே! ஆகவே, எடிட் செய்யும் வாய்ப்பு அவருக்கும் கிடைக்கவில்லை.

பின்னணி இதுதான்

மே மஸ்க் முன்பு ஒருமுறை இந்தியா வந்தபோது, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை சென்று பார்வையிட்டார். அதுகுறித்த படங்களை டிவிட்டரில் தற்போது பகிர்ந்து கொண்டார் அவர். அந்தப் பதிவில், தாஜ் மஹாலை 2007ஆம் ஆண்டில் பார்வையிட்டதாக வருடத்தை தவறாக குறிப்பிட்டு விட்டார் மே மஸ்க். அவர் தாஜ் மஹாலை பார்வையிட்டது 2012ஆவது ஆண்டாம்.



இதைத் தொடர்ந்து, மே மஸ்க் வெளியிட்ட புதிய பதிவில், “2007ஆம் ஆண்டு அல்ல; 2012ஆம் ஆண்டு. அந்த எடிட் பட்டன் எங்கே இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். சாதாரண பயனாளர்கள் மட்டுமல்லாமல், எலான் மஸ்க்கின் தாயாரும் கூட, எடிட் பட்டன் இல்லை என அலுத்துக் கொள்ள வேண்டியாதாகியுள்ளது.

பயனாளர்களின் கோரிக்கையை பரிசீலிக்கும் எலான் மஸ்க்

டிவிட்டர் பதிவுகளை எடிட் செய்யும் ஆப்சன் தர வேண்டும் என்று பயனாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதை எலான் மஸ்க்கும் பரிசீலனை செய்து வருகிறார். டிவிட்டரில் எடிட் ஆப்சன் வேண்டும் என்பது குறித்து டிவிட்டர் வழியே கருத்துக்கணிப்பு ஒன்றை அவர் நடத்தினார்.

Read More : திடீரென நீச்சல் குளத்தில் குதித்த குழந்தை - லாவகமாக தூக்கி காப்பாற்றிய தாய்.!


இதில், கருத்து தெரிவித்த பயனாளர்களில் சுமார் 73.6 சதவீதம் பேர் எடிட் பட்டன் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். எஞ்சியுள்ள 26.4 சதவீதம் பேர் அதற்கு எதிராக பதிவிட்டிருந்தனர்.

முன்னதாக, கடந்த 1954ஆம் ஆண்டில் எலான் மஸ்க்கின் முன்னோர்கள், தென்னாப்ரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் வழியில் இந்தியா வந்து, தாஜ்மஹாலை பார்வையிட்டார்களாம். அதுகுறித்த படங்களும் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளன.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Elon Musk, Trending, Twitter, Viral

அடுத்த செய்தி