Home /News /trend /

பல மாதங்களுக்கு பின் பராமரிப்பாளருடன் இணைந்த யானைகள்.! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

பல மாதங்களுக்கு பின் பராமரிப்பாளருடன் இணைந்த யானைகள்.! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

யானைகள்

யானைகள்

ஒரு கட்டத்தில் பராமரிப்பாளரின் அருகில் வந்ததும் யானை கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டு தங்கள் தும்பிக்கையால் தடவியும், பிளிறல் சத்தத்தை எழுப்பியும் அவர் மீது பாசத்தை பொழிகின்றன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
சோஷியல் மீடியாக்களில் உலா வரும் பெரும்பாலான வைரல் வீடியோக்கள் வேடிக்கையான அல்லது அழகான விலங்குகளின் செயல்கள் அடங்கி இருக்கும் வீடியோக்களாக இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான வீடியோக்கள் செல்ல நாய்கள் மற்றும் பூனைகள் அவற்றின் வேடிக்கையான செயல்கள் மற்றும் அபிமான செயல்களைக் காட்டும். தற்போது, யானை கூட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களை நெகிழ செய்து வருகிறது.பொதுவாக விலங்குகள் பலவிதமான உணர்ச்சிகளை அனுபவிக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவை. யானை இதில் சற்றே தனித்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

காட்டு மற்றும் வீட்டு விலங்குகள் தங்கள் பராமரிப்பாளர்களை நீண்ட காலமாக பிரிந்திருந்த பிறகு திடீரென ஒருநாள் சந்திக்கும் போது அவர்களை பாசமுடன் அரவணைத்து கொள்வது அவற்றின் வாழ்க்கையில் மிக அழகான விஷயங்களில் ஒன்றாகும். இந்த உணர்வை பிரிவின் வலியை உணர்ந்த பராமரிப்பாளர்கள் அல்லது செல்லப்பிராணி உரிமையாளர்களால் மட்டுமே விளக்க முடியும்.`

தாய்லாந்தில் உள்ள ஒரு சரணாலயத்தில் யானைகள் கூட்டம் திரும்பி வந்து தங்கள் பராமரிப்பாளரை நீண்ட மாதங்கள் கழித்து ஆசையாக அரவணைத்து கொள்ளும் வீடியோ ஒன்று நெட்டிசன்களின் இதயங்களை வென்று சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகியுள்ளது. Buitengebieden என்ற யூஸரால் ட்விட்டரில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ, ஆற்று நீரில் நடந்து வரும் யானை கூட்டத்தையும், அவற்றுக்கு எதிரே சற்று தொலைவில் ஆற்றில் நிற்கும் அவற்றின் பராமரிப்பாளரையும் காட்டுகிறது.

ALSO READ |  தனக்கான ஜோடியை தேடும், உலகிலேயே மிக உயரமான மனிதர்...

வீடியோவில் ஆற்றில் நிற்கும் பராமரிப்பாளர் தொலைவில் வரும் யானைகளை பார்த்து அதிக சத்தத்துடன் குரல் கொடுக்கிறார். அவரது குரலை தூரத்திலிருந்தே அடையாளம் கண்டு கொண்ட யானை கூட்டம் பதிலுக்கு பிளறியபடி ஆற்று நீரில் நடக்கும் வேகத்தை கூட்டுகின்றன. பின்னர் ஒரு கட்டத்தில் பராமரிப்பாளரின் அருகில் வந்ததும் யானை கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டு தங்கள் தும்பிக்கையால் தடவியும், பிளிறல் சத்தத்தை எழுப்பியும் அவர் மீது பாசத்தை பொழிகின்றன.

அந்த பராமரிப்பாளர் Save the Elephant Foundation-ன் இணை நிறுவனர் டெரெக் தாம்சன் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். யானைகள் அவரை நெருங்கும்போது ஆழமற்ற நீர்நிலையில் நிற்பதை நாம் வீடியோவில் காணலாம். கிளிப் தொடரும் போது, யானைகள் டெரெக்கைத் தங்கள் தும்பிக்கையால் வரவேற்று அணைத்துக்கொள்கின்றன, மேலும் அவரும் யானைகளை தடவி பாசத்தை வெளிப்படுத்துகிறார்.

 



 

"யானைகள் 14 மாதங்களுக்குப் பிறகு தங்கள் பராமரிப்பாளருடன் மீண்டும் இணைகின்றன" என்ற கேப்ஷனுடன் ட்விட்டரில் ஷேர் செய்யப்பட்டிருக்கும் வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள் தாங்கள் இதை பார்த்து மிகவும் நெகிழ்ந்ததாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் இந்த ஆண்டு தாங்கள் பார்த்த மிக அழகான விஷயங்களில் இந்த கிளிப்பும் ஒன்று என்று கூறியுள்ளனர். யானைகளைப் பற்றி எனக்கு மிகவும் தீவிரமான உணர்வு இருக்கிறது. ஒருவேளை அவை மனிதர்களை விட புத்திசாலித்தனத்தில் உயர்ந்தவையாக இருக்கலாம் என ஒரு யூஸர் கூறி இருக்கிறார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Elephant, Trending, Viral

அடுத்த செய்தி