காண்டாமிருகங்களை வேட்டையாட வந்தவரை மிதித்தே கொன்ற யானை கூட்டம்!

கோப்புப் படம்

கடந்த சனிக்கிழமை அன்று பூங்காவில் அதிகாரிகள் வழக்கமான காவல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் சட்டவிரோத வேட்டைக்கு வந்த மரம் நபர்கள் காவலர்களை கண்டதும் அவர்களிடம் மாட்டி கொள்ளாமல் தப்பியோட முயற்சித்த போது, அங்கிருந்த யானை கூட்டத்தில் சிக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசியப் பூங்காவில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள் க்ருகர் (Kruger)தேசியப் பூங்காவில் இருக்கும் காண்டாமிருகங்களை வேட்டையாட வந்ததாக கருதப்படும் அந்த மர்ம நபர்களில் ஒருவரை யானைகள் மிதித்தே கொன்றுவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Kruger தேசியப் பூங்கா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பூங்காவில் ஒன்றாகும். இங்கு காண்டாமிருகங்கள், சிங்கங்கள், யானைகள், சிறுத்தைகள் மற்றும் எருமைகள் உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன. இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் வழங்கியுள்ள விரிவான தகவல்கள் பின்வருமாறு: கடந்த சனிக்கிழமை அன்று பூங்காவில் அதிகாரிகள் வழக்கமான காவல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காண்டாமிருகங்களை வேட்டையாடுவதற்காக Kruger தேசியப் பூங்காவில் நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் மூவர், பூங்காவின் தெற்கு பகுதியில் ரேஞ்சர்களால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

தங்களை அதிகாரிகள் பார்த்து விட்டதால் அவர்களிடம் சிக்கி விட கூடாது என்பதற்காக தப்பி ஓடியுள்ளனர். தப்பிக்கும் முயற்சியில் மூவரும் வனத்தில் இருந்த யானைகளின் கூட்டத்தில் சிக்கி கொண்டுள்ளனர். அடர்ந்த வனத்தில் நடைபெற்ற அதிகாரிகளின் தேடுதல் வேட்டையின் முடிவில் ஒரு நபர் மட்டுமே சிக்கினார். அவரை பிடித்து விசாரித்த போது யானை கூட்டத்திடம் இருந்து தான் எப்படியோ தப்பித்து விட்டதாகவும், அனால் மற்ற இருவர் யானைகளிடம் மிதிபட்டு இறந்திருக்க கூடும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்று அதிகாரிகள் பார்த்த போது, யானைகளிடம் மிதிபட்டு ஒரு நபர் சம்பவ இடத்திலேயே இறந்திருந்தார். மற்றொருவர் அடிபட்ட காயத்துடன் பூங்காவை விட்டு தப்பி சென்றுள்ளது தெரிய வந்தது.

Also read... 'நமோ நமோ சங்கரா' பாடலுக்கு நடனமாடிய யானை - வைரலாகும் வீடியோ!

தப்பியோடிய நபரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திலிருந்து அதிகாரிகள் ஒரு துப்பாக்கி மற்றும் இரு கோடரிகளை கண்டெடுத்தனர். இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள க்ரூகர் தேசிய பூங்காவின் நிர்வாக நிர்வாகி கரேத் கோல்மன், யானைகளிடம் மிதப்பட்டு இறந்த மனிதனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார். அத்துமீறி நுழைந்த மர்ம நபர்களை பிடிக்க முயற்சி எடுத்த அணைத்து அதிகாரிகளையும் பாராட்டினார்.

காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுவதை “ஒழுக்கம், குழுப்பணி மற்றும் உறுதியான தன்மை” மூலமாக மட்டுமே தடுக்க முடியும் என்றார். காண்டாமிருகங்களின் கொம்புகள் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதால் இவற்றிற்கு டிமாண்ட் அதிகம். எனவே ஆப்பிரிக்க நாடுகளில் வேட்டைக்காரர்கள் காண்டாமிருகங்களைச் சுட்டு, அவற்றின் கொம்புகளை வெட்டி எடுத்து கொள்வது வழக்கமாக நிகழும் ஒரு சம்பவமாக இருக்கிறது. மேலும் உலகின் சுமார் 80% காண்டாமிருகங்கள் தென்னாப்பிரிக்காவில் தான் உள்ளன. குறிப்பாக க்ருகரில் அவை அதிகம் கொல்லப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: