சாலையில் ஓய்வெடுக்கும் ஆமையை தட்டியெழுப்பும் யானைக்குட்டி! ட்விட்டரைக் கவர்ந்த வைரல் வீடியோ

சாலையில் ஓய்வெடுக்கும் ஆமையை தட்டியெழுப்பும் யானைக்குட்டி! ட்விட்டரைக் கவர்ந்த வைரல் வீடியோ
யானை
  • News18
  • Last Updated: November 5, 2019, 6:21 PM IST
  • Share this:
சாலையில் நடுவில் இருக்கும் ஆமையை தட்டி எழுப்பி ஓரத்துக்கு செல்ல வைக்கும் யானைக் குட்டியின் வீடியோ இணையத்தில் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீர் கஸ்வான் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் காட்டுக்கு நடுவில் உள்ள மணல் சாலையில் யானைக்கு குட்டி ஒன்று வேகமாகச் செல்கிறது. அப்போது சாலையின் நடுவில் படுத்திருக்கும் ஆமை ஒன்றை பார்க்கும் யானைக் குட்டி அங்கே நிற்கிறது.

பின்னர், ஆமையை துதிக்கையால் தட்டி எழுப்பி, ஓரத்துக்குச் செல்லத் தூண்டுகிறது. யானை தட்டியதால் எழுந்த ஆமை மெல்லமாக சாலையின் ஓரத்துக்கு செல்கிறது. இந்த வீடியோ பலரும் ரசித்து கமெண்ட் செய்துவருகின்றனர்.

Also see:

First published: November 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்