ஒத்தையடிப்பாதையில் ஒய்யாரமாக நடந்து வந்த காட்டு யானை... நெட்டிசன்களை கவர்ந்த வைரல் வீடியோ

யானை

காட்டில் யானை ஒன்று ஸ்டைய்லாக நடந்துவீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

 • Share this:
  இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் மனதை கவரும் வகையில் எண்ணற்ற விலங்குகளின் வீடியோக்கள் வலம் வருகின்றன. அவற்றில் யானைகளின் வீடியோக்களும் அடங்கும். மாபெரும் உருவம் கொண்ட விலங்குகள் செய்யும் சில சேட்டைகள் அதிகம் ரசிக்கத்தக்கவையாக இருக்கும். அவை தண்ணீரில் குளிப்பது முதல் பிற யானைகளோடு விளையாடுவது, சில வளர்ப்பு யானைகள் செய்யும் குறும்புகள் என பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த லிஸ்ட்டில் இப்போது மற்றொரு வீடியோவும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவில் ஒரு யானையின் நேர்த்தியான மற்றும் மிகவும் ஸ்டைலான நடையை நீங்கள் பார்க்கலாம்.

  https://twitter.com/ParveenKaswan/status/1402854319439843329

  இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் “யானைகளிடையே இவர் மட்டும் ஒரு மாடலாக இருப்பார் எனத் தெரிகிறது. அத்தகைய அழகான நடை, ”என்று கேப்சன் செய்துள்ளார். வீடியோவில் ஒரு யானை காட்டில் உள்ள பாதையில் நடந்து வருவதைக் காணலாம். ஆனால் அதன் நடை மற்ற யானைகளோடு ஒப்பிடும் போது, பார்ப்பதற்கு சற்று அழகாகவே இருக்கிறது. கடந்த ஒரு நாள் முன்பு வெளியிடப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வீடியோ கிட்டத்தட்ட 33,000 பார்வைகளைக் குவித்துள்ளது. இது 2,600 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் டன் கணக்கில் கருத்துகளையும் சேகரித்துள்ளது. இதுபோன்று கமெண்ட் செக்சனில் கருத்து பதிவிட்ட ஒரு நபர் "மற்றொரு மாடல்" என்று குறிப்பிட்டு, மேலும் ஒரு யானையின் வீடியோவை பகிர்ந்து கொண்டார்.

  https://twitter.com/rajiivsharma/status/1402921967301238786

  ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் இதுபோன்று எண்ணற்ற விலங்கினங்களின் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இவரின் பதிவுகளுக்கென சில பாலோயர்ஸ்களும் காத்திருப்பர். இவர் சமீபத்தில் கூட விலங்கியல் பூங்காவில் உள்ள ஒரு சிங்கம் தண்ணீர் குளத்தில் நீந்தி வந்த வாத்தின் தலையில் தட்டிக்கொடுப்பதை போன்ற ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  அந்த வீடியோ மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது. வனவிலங்கு பாதுகாப்பு துறையில் பணிபுரிந்து வரும் இவர் அவ்வப்போது அழிந்துவரும் குருவிகள், யானைகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் வினோதமான சம்பவங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

  https://twitter.com/ParveenKaswan/status/1396401434237624322

  இவர் கடந்த மே 25ம் தேதி தொலைதூர கிராமத்தில் உள்ள நீர் தொட்டியில் விழுந்த குட்டி யானையை வனவிலங்கு அதிகாரிகள் மீட்கும் வியத்தகு வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். கயிறுகள் மற்றும் மர பலகைகளைப் பயன்படுத்தி வனவிலங்கு அதிகாரிகள் குழு நீர்த்தேக்க தொட்டியில் இருந்து யானைக்குட்டியை வெளியே இழுக்க அரும்பாடுபட்டனர். மேலும் குட்டி யானை பாத்திரமாக மீட்கப்பட்டதை தூரத்தில் இருந்து அதன் தாய் யானை பார்த்ததாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மீட்கப்பட்ட குட்டி யானை குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைந்தது. இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என்றாலும் நெட்டிசன்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.
  Published by:Karthick S
  First published: