HOME»NEWS»TREND»elephant steals womans hat only to return it later viral video divides internet vin ghta
பெண்ணின் தொப்பியை திருடி விளையாடும் யானை - இண்டெர்நெட்டை கலக்கும் வீடியோ!
உலகில் பல்லாயிரகணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள்; மற்றொன்று ஆப்ரிக்க யானைகள். உலகில் உள்ள உயிரினங்களில் நியாபக சக்திக்கு பேர்போனது இந்த யானைகள்.
உலகில் பல்லாயிரகணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள்; மற்றொன்று ஆப்ரிக்க யானைகள். உலகில் உள்ள உயிரினங்களில் நியாபக சக்திக்கு பேர்போனது இந்த யானைகள்.
பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும் பெரிய உருவமான யானை உருவத்தில் பிறரை அச்சுறுத்துமே தவிர உண்மையில் யானைகள் குழந்தைகளை போன்றது. பல நேரங்களில் யானைகளின் குறும்புத்தனம் பலரை மகிழ்விக்கும். அந்த வகையில், சமீபத்தில் ஒரு பெண் ஆசை ஆசையாக ஒரு யானையுடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்காக யானைக்கு அருகே சென்றிருக்கிறார். அப்பொழுது பெண்ணுக்கு பின்னால் இருந்த யானை, அந்த பெண் அணிந்திருந்த தொப்பியை தனது தும்பிக்கையால் எடுத்து தனது வாய்க்குள் வைத்துக் கொண்டது. சில கணங்களுக்கு பிறகு தொப்பியை மீண்டும் அந்தப் பெண்ணிடமே கொடுத்தது. இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோதான் இப்போது இண்டர்நெட்டில் படு வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்க கூடைப்பந்து வீரர் ரெக்ஸ் சாப்மேன், யானையின் குசும்பு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "டைம்லைன் க்ளென்சர்: ஒரு யானை ஒரு பெண்ணை கேலிசெய்கிறது. யானைகள் மிகவும் புத்திசாலிகள் ... (sic)" என்ற தலைப்பில் அவர் அந்த கிளிப்பை வெளியிட்டார்.
இந்த வீடியோவில், யானைக்கு முன்னாள் நின்றுகொண்டிருக்கும் அந்த பெண் கூலாக பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுப்பதாக தெரிகிறது. ஆனால் அந்த யானை போட்டோவிற்கு போஸ் கொடுக்காமல் அந்த பெண் அணிந்திருந்த தொப்பியை தனது நீண்ட தும்பிக்கையால் எடுத்து தனது வாய்க்குள் வைத்துக் கொண்டது. அங்குள்ளவர்கள் இதனைக் கண்டு சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருந்தனர் அந்தப் பெண்ணோ எனது தொப்பியை என்னிடம் திருப்பித் தந்து விடு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த யானையிடம் கெஞ்சினார். இதனையடுத்து சில நொடிகளுக்கு பிறகு யானையும் தனது வாயிலிருந்து தொப்பியை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து விட்டது.
இண்டர்நெட்டில் இதற்கான ரியாக்சன் எப்படி இருந்தது?
ட்விட்டரில் இந்த வீடியோவை இதுவரை 320.3k க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் 13.4k லைக்குகளையும், 2k ரீட்வீட்களும் பெற்றுள்ளது. ஆனால் சிலர் கஇந்த வீடியோவை ரசித்தாலும், பலர் வீடியோவைப் பகிர்ந்ததற்காக ரெக்ஸ் சாப்மேனை விமர்சித்தனர். சிம்பாப்வேயில் உள்ள ஒரு சஃபாரி பூங்காவில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக ட்விட்டர் யூசரும் பத்திரிகையாளருமான யஷர் அலி சுட்டிக்காட்டினார், இது மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் நெறிமுறையற்ற தொடர்புகளை அனுமதிக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.
1. I'm familiar with this place. This is a safari park in Zimbabwe which allows for unethical interactions between humans and elephants.
I've talked to Rex about videos like this before and he always says he didn't know, but how many times can someone claim ignorance? https://t.co/K71jsPvMvA
உலகில் பல்லாயிரகணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள்; மற்றொன்று ஆப்ரிக்க யானைகள். உலகில் உள்ள உயிரினங்களில் நியாபக சக்திக்கு பேர்போனது இந்த யானைகள். பலருக்கும் ஆஸ்த்தான வன விலங்காகவும் இந்த யானைகள் உள்ளது. உலக வனவிலங்கு நிதியத்தின் கணக்குப்படி, உலகில் இப்போது 4,15,000 ஆப்ரிக்க யானைகள் உள்ளன. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. எண்ணிக்கையில் பார்ப்பதற்கு அதிகமாக தெரிந்தாலும், தற்போது வேட்டையாடுவதால் யானை இனங்கள் அழிந்து வருகிறது.