12 வருடங்களுக்கு முன்பு தனக்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவரை அடையாளம் கண்ட காட்டுயானை மருத்துவரின் கவனத்தை ஈர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்பு என்பது அளவிட முடியாதது என்பதற்கு இதுவே ஒரு சிறந்த சான்றாகும். 31 வயதான பாலூட்டி தனது கால்நடை மருத்துவர் பட்டரபோல் மனீயனை 12 வருடங்களுக்கு பிறகும் நினைவில் வைத்திருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தனித்துவமான ஒலியை உருவாக்கியதன் மூலம் மருத்துவரின் கவனத்தை ஈர்த்த காட்டுயானை, தனது மாபெரும் உருவத்துடன் மருத்துவரை அணுகியுள்ளது. இந்த அரிதான மற்றும் மனதை நெகிழ வைத்த சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது. டெய்லி மெயிலில் வெளியான அறிக்கையின்படி, டாக்டர் மனீயனை நோக்கி இதயத்தை உருகவைக்கும் சைகையை காட்டிய யானை பிளாய் தாங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. யானையின் சைகையால் உற்சாகமடைந்த கால்நடை மருத்துவர் கூறியதாவது, பிளாய் தாங் தன்னை அதன் தனித்துவமான ஒலியுடன் அங்கீகரித்ததாகவும் , அதன் சைகையால் வாயடைத்து போனதாகவும் கூறியுள்ளார்.
மருத்துவர் தனது ரோந்து பணிக்காக வனப்பகுதியில் இருந்தபோது இந்த அழகான சம்பவம் அரங்கேறியுள்ளது. விலங்குகளின் நலனுக்காக மக்கள் செய்து வரும் பணிகளைப் பாராட்ட இந்த சம்பவம் மேலும் மேலும் பலரை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புவதாக கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார். யானைக்கும் கால்நடை மருத்துவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு கடந்த 2009 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அப்போது நோய்வாய்பட்டிருந்த பிளாய் தாங் யானை காய்ச்சல், பசியின்மை, முகம், வயிறு மற்றும் கழுத்தில் வீக்கம் போன்றவற்றால் கடுமையாக அவதிப்பட்டது.
மேலும், ஒட்டுண்ணி நோய் பிரச்சனையும் அதற்கு இருந்தது. இது தவிர வீங்கிய கண்கள், கால்கள் மற்றும் முதுகில் ஸ்டிஃப்னஸ் மற்றும் இரத்த சோகை ஆகியவற்றாலும் பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக, இந்த பெரிய பாலூட்டி லம்பாங்கில் உள்ள வன தொழில் அமைப்பின் எல்லைக்கு கொண்டு வரப்பட்டது. தேசிய பூங்காக்கள், வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்புத் துறையின் ஊழியர்களால் யானைக்கு போதுமான சிகிச்சை மற்றும் கவனிப்பு வழங்கப்பட்டது.
Also read... கர்நாடகா வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை துரத்திய யானை - வைரலாகும் வீடியோ!
அதன் பிறகு யானை முழுமையாக குணமடைந்ததும், மீண்டும் வனப்பகுதியிலேயே விடப்பட்டது. அன்றிலிருந்து தற்போதுவரை பிளாய் தாங் யானை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மரண நிலைக்கு அருகில் இருந்த விலங்குக்கு சிகிச்சையளித்த நாட்களை நினைவு கூர்ந்த மருத்துவர் மனீயன், "அப்போது யானை மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது.
அதன் உடல் மிகவும் பலவீனமாக இருந்ததால் மற்ற சக யானைகளுடன் அதனால் போராட முடியவில்லை என்றும் கூறினார். ஆனால் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தன்னை கவனித்துக்கொள்வது எப்படி என்பதை அறிந்துகொண்டதால் குணமாகிவிட்டது. யானை குணமடைவதற்கான செயல்முறை மிக நீண்டதாக இருந்தாலும் இறுதியில் முழுமையாக குணமடைந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். யானைகள் தாய்லாந்தின் தேசிய விலங்கு. அந்நாட்டில் ஏறக்குறைய 3000 முதல் 4000 யானைகள் உள்ளன. அவற்றில் பாதி வளர்ப்பு யானை என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.