Viral Video : 'உடம்பு தாங்க பெருசு..மனசு அது குழந்தைங்க..புட்டி பால் குடிக்கும் யானை' - இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ

வைரலாகும் கியூட் வீடியோ

யானைகள் செய்யும் குறும்புத்தனங்கள் இணையத்தில் அவ்வப்போது வலம் வரும்.அவ்விதம் குட்டி யானை ஒன்று உருவம் பெரிதானாலும் மனதளவில் என்றும் நாங்கள் குழந்தைகளே என்பதை நிரூபிக்கும் வகையில் செய்த செயல் இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது.

  • Share this:
    ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை யானையின் 11 விநாடி கிளிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது, இது இதுவரை 9,000 க்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.

    10 நிமிடங்கள் மட்டுமே அடங்கிய அந்த குறுகிய கிளிப்பில், ஒரு யானை ஒரு பாட்டில் இருந்து பால் குடிப்பதைக் காண முடிகிறது. யானை தனது தும்பிக்கை உதவியுடன் பாட்டிலைப் பிடித்து, அதில் இருந்த பால் முழுமையும் குடித்து முடிக்கிறது.யானையின் பாதுகாவலர் ஒரு பாட்டிலை யானை காலி செய்த பின்னர் அடுத்த பாட்டிலை எடுத்து கொடுக்கின்றார். பாலை குடித்து முடித்த யானை பசி அடங்கி தன்னிறைவு பெற்றது.

    இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பல லைக்குகள் மற்றும் மறு ட்வீட் மூலம் வைரலாகியுள்ளது. பலரும் யானையின் செயலை கண்டு வியந்து தங்கள் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு உள்ளனர்.





    இந்த கம்பீரமான விலங்குகளை கவனித்துக்கொண்டதற்கு மிக்க நன்றி. கடவுள் ஆசீர்வதிப்பார், ”என்று ஒரு பயனர் கூறினார். மற்றொரு கருத்து, "இதைப் பார்க்க எப்போதும் அருமை!" என பதிவிட்டுள்ளார்.





    முன்னதாக ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளையால் ட்விட்டரில் பகிரப்பட்ட யானை குட்டியின் குறும்பு தான வீடியோ ஒன்று பலரின் கவனம் பெற்று வைரலானது. அந்த வீடியோவில், குட்டி யானை ஒன்று அழகாக விளையாடிக் கொண்டிருந்தது. மேலும் அந்த வீடியோவில் பொண்டேனி வண்ணமயமான சட்டை அணிந்து மரக்கிளைகள் மற்றும் இலைகளுடன் விளையாடி கொண்டிருந்த யானையின் செயல் இணையத்தில் வைரலானது.



    விளையாட்டுத்தனமான குட்டி யானையின் செயல்கள் பலரையும் கவர்ந்தது. பலர் யானையின் வண்ணமயமான சட்டை குறித்து பேசினர். “குழந்தை யானைகள் மிகவும் இனிமையாகவும், அழகாகவும் இருக்கின்றன. அவை சட்டைகள் அணிந்திருக்கும் போது மேலும் அழகாக இருக்கிறது என்று ஒரு ட்விட்டர் யூசர் குறிப்பிட்டார். "உலகிற்கு அதிக குழந்தை யானைகள் தேவை" என்று மற்றொருவர் கருத்து தெரிவித்தார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     
    Published by:Sankaravadivoo G
    First published: