• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • தண்ணீர் தொட்டியில் ஜாலியாக விளையாடும் குட்டி யானை.. வைரலாகும் வீடியோ!

தண்ணீர் தொட்டியில் ஜாலியாக விளையாடும் குட்டி யானை.. வைரலாகும் வீடியோ!

சுமார் 51 வினாடிகளே கொண்ட இந்த வீடியோவில் யானைக்குட்டி தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் நீராடி, கோடை வெப்பத்தை தாக்கு பிடிக்க குளிர்ந்த குளியலை சந்தோசமாக அனுபவித்ததை காணலாம்.

  • Share this:
சமீப காலமாக செல்லப்பிராணிகள் மற்றும் காட்டு விலங்குகளின் அழகிய தருணங்கள் மற்றும் சில குறும்பு வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், ஒரு குட்டி யானையின் விளையாட்டு மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு தொட்டியில் அந்த குட்டி யானை மகிழ்ச்சியுடன் குளிக்கும் வீடியோ தற்போது இணயத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் 51 வினாடிகளே கொண்ட இந்த வீடியோவில் யானைக்குட்டி தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் நீராடி, கோடை வெப்பத்தை தாக்கு பிடிக்க குளிர்ந்த குளியலை சந்தோசமாக அனுபவித்ததை காணலாம்.

மேலும் அந்த கிளிப்பில் குட்டி யானையின் தாய் தொட்டிக்கு அருகில் நின்று கொண்டிருப்பதையும் காணலாம். அது தண்ணீரில் விளையாடும் தனது குழந்தையை மிகுந்த கவனத்துடன் கண்காணித்து கொண்டிருந்தது. இந்த வீடியோவை வெளியிட்ட அதிகாரி, "இந்த வெப்பமான கோடையில் ஒரு தாயின் கண்காணிப்புக் கண்களின் கீழ் யார் குளிர்கிறார் என்று பாருங்கள்" என தனது பதிவில் கேப்ஷன் செய்துள்ளார்.



மேலும், அந்த வீடியோ பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் வியூஸ்களை பெற்றது. இது நெட்டிசன்கள் வீடியோவை பார்ப்பதில் எவ்வளவு மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. மேலும், வீடியோவிற்கு பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதிலும் பலர் ஹார்ட் எமோஜிக்களை கமெண்ட் செக்சனில் பதிவிட்டுள்ளனர்.

பொதுவாக தண்ணீரை அதிகம் விரும்பும் ஒரு விலங்கு என்றால் அது யானை தான். அவை, தண்ணீரை பார்த்தாலே போதும் அதில் குளித்து விளையாட விரும்புகின்றன. அதிலும், பிற விலங்கினங்களுடன் ஒப்பிடும் போது, யானை அதிக குறும்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது. உடலளவில் பெரியதாக இருந்தாலும் இவை மனதளவில் குழந்தைதான் என்பதை காட்டும் பல வீடியோக்கள் இணையத்தில் வலம் வருவதையும் காணலாம். வனவிலங்குகளின் இதுபோன்ற செயல்களை இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவதை ஒரு போதும் மறப்பதில்லை.

இவர் முன்னதாக வனவிலங்கு சரணாலயத்தில் இருக்கும் சிங்கம் ஒன்று குளத்தில் நீந்திக்கொண்டிருந்த ஒரு வாத்தின் தலையை தட்டிக் கொடுப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் ரசிக்கத்தக்க வீடியோவாக இருந்தது. சிங்கம் வேட்டையாடும் பயங்கரமான விலங்கு மட்டுமல்ல அவற்றிக்கு மற்ற விலங்குகளுடன் விளையாடவும் தெரியும் என்பதை அந்த வீடியோ எடுத்துக்காட்டியது.



இதுதவிர, நம் நாட்டில் அழிவின் விழிப்பில் இருக்கும் கருஞ்சிறுத்தை ஒன்று ஒரு கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் இருந்த நாயினை வேட்டையாடிச் சென்ற வீடியோவையும் அவர் முன்னதாக பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: