ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஊருக்குள் புகுந்த 40 யானைகள்.. அலறியடித்து ஓடிய மக்கள்

ஊருக்குள் புகுந்த 40 யானைகள்.. அலறியடித்து ஓடிய மக்கள்

அசாம்

அசாம்

அஸ்ஸாமின் பல இடங்களில் உணவு தேடி ஊருக்குள் யானைகள் வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Assam, India

அசாமின் கோல்பராவில் உள்ள ரோங்ஜூலியில், யானை கூட்டம் ஒன்று மக்களை துரத்தும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

செவ்வாய்க்கிழமை மாலை, அசாமின் கோல்பராவில் உள்ள ரோங்ஜூலியில் உள்ள குடியிருப்பு பகுதியில் யானை கூட்டம் ஒன்று நுழைந்துள்ளது. அங்கே இருந்த மக்களில் ஒரு குழுவினர், குடியிருப்பு பகுதியில் இருந்து யானைக் கூட்டத்தை விரட்ட முயற்சித்துள்ளனர்.காட்டு யானையை விரட்ட முயன்றவர்களை யானை ஒன்று விரட்ட முயன்றது.

சிறிது நேரம் கழித்து அந்த ஒற்றை யானை காட்டுக்குள் திரும்ப சென்று விட்டது. இதன் காட்சிகள் தான் இப்போது இணையத்தில் பரவி வருகிறது

சமீப காலமாகவே இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள காட்டாறு பகுதியில் இருந்து உணவு தேடி யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதாக அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். சில நாளுக்கு முன்பு கூட 40 யானைகள் ஊருக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியதாக தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, அசாமில், கோல்பாரா மாவட்டத்தில் ஒரு காட்டு யானை இறந்து கிடந்ததாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவல்துறையினரின் கூற்றுப்படி, கீழ் அசாம் மாவட்டத்தில் உள்ள லக்கிபூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஜாய்ராம்குச்சி பகுதியில் உள்ள ஒரு நெல் வயலில் யானையின் சடலத்தை உள்ளூர்வாசிகள் பார்த்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உணவு தேடி வெளியே வந்த யானை இறந்ததற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று சம்பவம் குறித்து லக்கிபூர் வனச்சரக அதிகாரி துருபா தத்தா கூறினார்.

இவ்வாறு அஸ்ஸாமின் பல இடங்களில் உணவு தேடி ஊருக்குள் யானைகள் வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. சில சம்பவங்கள் வேடிக்கையாகவும் சில சம்பவங்கள் விபரீதமாகவும் முடிகிறது.

First published:

Tags: Assam, Elephant, Viral Video