Home /News /trend /

ஆத்தாடி என்னா ஒரு வேகம்... பேருந்தை தாக்க முயன்ற ஒற்றை காட்டு யானை!

ஆத்தாடி என்னா ஒரு வேகம்... பேருந்தை தாக்க முயன்ற ஒற்றை காட்டு யானை!

பேருந்தை தாக்க முயன்ற ஒற்றை காட்டு யானை!

பேருந்தை தாக்க முயன்ற ஒற்றை காட்டு யானை!

Viral Video | காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றை, யானை ஒன்று பெருங்கோபத்துடன் தாக்க விரட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

    காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றை, யானை ஒன்று பெருங்கோபத்துடன் தாக்க விரட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் லட்சக்கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன. அதில்  யானை மற்றும் மனிதர்கள் இடையிலான மோதல் தொடர்பான வீடியோக்கள் ஏராளம். வழித்தடங்கள் அழிக்கப்படுவது, தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு, வாழ்விடம் போன்ற பிரச்சனைகளால் இந்தியாவில் யானை மற்றும் மனிதர்களுக்கு இடையிலான மோதல்கள் ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் யானைகளால் தாக்கப்பட்டு 3,767 மக்கள் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

    மனிதர்கள் காட்டை அழித்து அதனை குடியிருப்பாக மாற்றுவதால், யானைகள் உணவு பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் தங்களது பசியை போக்கிக்கொள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. அப்படி நுழையும் காட்டு யானை அல்லது அதன் கூட்டத்தை பார்த்து மிரண்டு போய் மக்கள் நெருப்பு, பட்டாசு போன்றவற்றை கொண்டு விரட்டி அடிக்கின்றனர். இதுதொடர்பான பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் மற்றும் செய்திகளை நாம் பார்த்திருப்போம். மனிதர்களின் அட்டாக்கிற்கு பதிலடி கொடுப்பது போல் காட்டு பாதையில் வரும் மனிதர்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் மீது யானைகள் ஆவேசமாக தாக்குதல் நடத்தும் வீடியோக்களும் ஏராளம்.

    ALSO READ |  ட்விட்டரில் சைலன்ட் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ட்விட்டர் சர்க்கிள்'அம்சம் - என்ன பயன்?
     

    தற்போது அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஐஎஃப்எஸ் அதிகாரி சுரேந்தர் மெஹ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒற்றை காட்டு யானை ஆவேசத்துடன் பேருந்தை துரத்திக் கொண்டு வரும் காட்சியை பதிவு செய்துள்ளார். இதே வீடியோவை மேலும் இரண்டு ஐஎஃப்எஸ் அதிகாரிகளான சுசாந்தா நந்தா மற்றும் பர்வீன் கஸ்வான் ஆகியோரும் பகிர, சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

    அந்த வீடியோவில், காட்டுப் பாதையில் செல்லும் பேருந்து ஒன்றை, யானை ஒன்று வழிமறிக்கிறது. இதனைக் கண்ட பேருந்து ஓட்டுநர் பாதுகாப்பான தூரத்தில் பேருந்தை நிறுத்திவைத்துள்ளார். ஆனால் யானை திடீரென ஆவேசமடைந்து, சத்தமாக பிளிறியபடியே பேருந்தை நோக்கி ஓடி வருகிறது. உடனே நிலைமையை புரிந்துகொண்ட ஓட்டுநர் பேருந்தை ரிவர்ஸ் எடுக்கிறார். யானை தனது வேகத்தை மேலும் அதிகரித்துக் கொண்டு பேருந்தை நெருக்கி வருகிறது. இதைப் பார்த்து பீதியடைந்த பயணிகள் பலரும் கூச்சலிடுகின்றனர். ஆனால் ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் துரத்துவதை கைவிட்ட காட்டு யானை, தனக்கு எதிரே இருந்த காட்டுக்குள் செல்கிறது”

     



     

    காண்போரை திகிலடைய வைக்கும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஐஎஃப்எஸ் அதிகாரி சுரேந்தர் மெஹ்ரா , "எப்போதும் எச்சரிக்கையுடன் இருங்கள் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருங்கள். குறிப்பாக வாகனத்திற்குள் இருந்தாலும் யானை உலவும் பகுதிகளில் பாதுகாப்பாக இருங்கள்” என மக்களை எச்சரித்துள்ளார்.

    சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 31 ஆயிரத்திற்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கில் லைக் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகிறது. இந்த வீடியோவை பார்த்து மிரண்டு போன பலரும் தங்களுக்கு ஏற்பட்ட இதே போன்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். பலரும் யானையிடம் இருந்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநரை பாராட்டி வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Elephant, Viral Video

    அடுத்த செய்தி