தந்திரக்கார யானை.. மின்சாரக் கம்பியை தகர்க்கும் டெக்னிக்கை நீங்களே பாருங்க...!

இந்த வீடியோ பலரது மனங்களைக் கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தந்திரக்கார யானை.. மின்சாரக் கம்பியை தகர்க்கும் டெக்னிக்கை நீங்களே பாருங்க...!
யானை தந்திரம்
  • News18
  • Last Updated: November 26, 2019, 12:27 PM IST
  • Share this:
நரி மட்டுமல்ல... யானையும் தந்திர புத்தி கொண்டதுதான் என்பதை இந்த வீடியோ தெளிவாக விளக்குகிறது. பார்க்கும்போது ஆச்சரியத்தோடு ரசிக்கவும் வைக்கிறது அதன் செயல்.

யானைகள் காடுகளை கடக்கும் வீடியோக்கள் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இந்த வீடியோ கொஞ்சம் விசித்திரமானது. காட்டுக்கு நடுவே சாலை இருப்பதால் இரண்டு பக்கங்களும் மின்சார கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளது. தந்திரக்கார யானை அதை சுதாரித்துக் கொண்டது. பின் அதிலிருந்து ஷாக் அடிக்கிறதா என்று சோதிக்கிறது. பின் மின்சாரம் தாக்கவில்லை என்பதை அறிந்து அதை கால்களால் தகர்க்க முற்படுகிறது. முடியவில்லை என்றதும் அருகில் இருந்த கட்டையை எடுத்து அடித்து தகர்த்து சாலையை கடக்கிறது. பின் எதிர் புற சாலையோர மின்சார கம்பியையும் அதே டெக்னிக்கை பயன்படுத்தி தகர்த்து கடந்து செல்கிறது.

இந்த வீடியோ பலரது மனங்களைக் கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.நீங்களும் காண இதோ வீடியோ...First published: November 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்