உள்ளம் குழந்தைதான்.. புல்வெளியில் புரண்டு உருளும் யானையின் குறும்பு!

உள்ளம் குழந்தைதான்.. புல்வெளியில் புரண்டு உருளும் யானையின் குறும்பு!
யானை
  • Share this:
யானைகள் அளவில் பெரிதானாலும், அதன் உள்ளம் குழந்தை தான் என்பதற்கு உதாரணமாக யானை ஒன்று தண்ணீரில் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா விலங்குகளின் பிரியர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகள் செய்யும் குறும்புத் தனங்களை அவ்வப்போது வெளியிடுவார்.

இதனிடையே யானை ஒன்று பசும்புல் வெளியில் ஸ்ப்ரிங்கரை உடைத்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீரில் குதூகலமாக விளையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.


யானையின் இந்த குறும்புச் செயல்பாடு பார்ப்போரை மனம் குளிர வைக்கின்றது. இந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள அவர், யானைகள் புத்திசாலித்தனம் கொண்டவை மட்டும் அல்ல நாம் நம்ப முடியாத அளவிற்கு விளையாட்டுத்தனம் கொண்டவையும் கூட.. ஸ்பிரின்கரை உடைப்பதை இந்த யானை தனது வாழ்நாள் வாடிக்கையாகக் கொண்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

Also see...பறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..!

 
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading