''நடந்து நடந்து கால் வலிக்குது'' ரெஸ்ட் எடுக்க கார் மீது அமர்ந்து அலறவிட்ட காட்டுயானை

''நடந்து நடந்து கால் வலிக்குது'' ரெஸ்ட் எடுக்க கார் மீது அமர்ந்து அலறவிட்ட காட்டுயானை
  • Share this:
காட்டு யானைகள் கூட்டமாக இருப்பதை விட ஒற்றை காட்டு யானை தான் மிகவும் ஆபத்தானது என்பதை நிரூபிக்கிறது வீடியோ.

தாய்லாந்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் காரில் சென்ற ஒருவர் காட்டுயானையிடம்  வசமாக சிக்கி உள்ளார். இதனை எதிரிலில் உள்ள மற்றொருவர் வீடியோ எடுத்துள்ளார்.

சாலையில் சென்ற காட்டு யானை ஒன்றை காரில் இருந்தவர்கள் பாரத்து கொண்டிருந்தனர். அந்த காட்டு யானைக்கு அவர்கள் எந்தவித தொந்தரவும் கொடுக்கவில்லை. ஆனால் அந்த காட்டு யானை திடிரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த காரின் மீது ஏறி நசுக்க ஆரம்பித்துள்ளது.


இதை சற்றும் எதிர்பார்க்காத காரில் இருந்தவர்கள் அலறி உள்ளனர். ஆனால் அந்த காட்டு யானை காரை விடுவது போல் இல்லை. அதன் மீது பலமாக ஏறி ஜம்முனு உட்கார முயற்சி செய்கிறது.காட்டு யானை அசந்த நேரத்தில் கார் விடுபட, விட்டால் போதுமென்று காரை வேகமாக ஓட்டி அந்த காட்டு யானையிடமிருந்து தப்பி விடுகின்றனர். ஆனால் கார் பலத்த சேதமடைந்துள்ளது. உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களை தொலைவில் இருந்து பார்ப்பதே மிகவும் சரியான ஒன்று என்பதை இந்த வீடியோ உணர்த்தி உள்ளது.
First published: November 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்