Home » News » Trend

பசுமை நினைவுகளை அசைபோட வைத்த பாட்டி... இந்த விளையாட்டை உங்கள் ஊரில் எப்படி அழைப்பார்கள்..?

பேத்தி உடன் ஜாலியாக கற்களை வைத்தும் விளையாடும் பாட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பசுமை நினைவுகளை அசைபோட வைத்த பாட்டி... இந்த விளையாட்டை உங்கள் ஊரில் எப்படி அழைப்பார்கள்..?
வீடியோ காட்சி
  • Share this:
கொரோனா லாக்டவுனால் ஒருபுறம் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். மறுபுறம் பழைய நினைவுகள், சொந்த பந்தங்கள் உடன் நேரத்தை செலவிடுவது என பழைய காலத்திற்கு திரும்பி உள்ளனர். வீட்டில் அனைவரும் முடங்கி இருப்பதால் பொழுதை போக்க தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் என்று நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

மொபைல் கேம்களில் மூழ்கி கிடந்த தற்போதைய தலைமுறையினரும், ஊரடங்கால் நாம் மறைந்துவிட்டதாக நினைத்த இதுபோன்ற பழைய விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அப்படியொரு விளையாட்டு மூலம் நம்மை கடந்த காலத்திற்கே அழைத்து சென்றுள்ளார் பாட்டி ஒருவர். பேத்தியுடன் கற்களை வைத்தும் விளையாடும் இந்த விளையாட்டு பல ஊர்களில் பல விதமாக அழைக்கப்படுகிறது.




அதில் ஒரு பெயர் தான் 'கல்லாங்கா'. இந்த விளையாட்டில் பாட்டி செய்யும் தந்திரங்களை பார்த்து பேத்தி வாயடைத்து போகிறாள். குதூகலமாக விளையாடும் அந்த பாட்டி சின்ன கற்களை பல வித்தைகளை வெளிப்படுத்துகிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர் கடந்த காலத்திற்கு சென்று வந்ததாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading