Home /News /trend /

80 வயதில் சமஸ்கிருதத்தில் PhD முடித்த மூதாட்டி...!

80 வயதில் சமஸ்கிருதத்தில் PhD முடித்த மூதாட்டி...!

சசிகலா ராவல்

சசிகலா ராவல்

80 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் சமஸ்கிருதத்தில் தனது நீண்ட நாள் கனவான PhD பட்டத்தை பெற்றுள்ளார்.

  • News18
  • Last Updated :
'படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை', ஒருவர் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருக்கலாம், கல்விச் செல்வம் படிக்க படிக்க தான் பெருகும் இதுபோன்ற பழமொழிகளை நம் முன்னோர்கள் சும்மா சொல்லிவிட்டு செல்லவில்லை. மேற்சொன்ன பழமொழிகளை வடஇந்தியாவை சேர்ந்த பாட்டி ஒருவர் உண்மையாக்கியுளார். 80 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் சமஸ்கிருதத்தில் தனது நீண்ட நாள் கனவான PhD பட்டத்தை பெற்றுள்ளார். அவரைப்பற்றிய தகவலை தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம்.

உஜ்ஜைனில் வசிக்கும் சசிகலா ராவல், மாநில அரசின் கல்வித் துறையில் விரிவுரையாளராக இருந்து ஓய்வு பெற்றார். அவர் 2009 முதல் 2011 வரை ஜோதிடத்தில் எம்.ஏ. முடித்திருந்தார். அவர் அதோடு நிற்கவில்லை, தொடர்ந்து படித்தார். தனது PhDஐ வராஹமிஹிராவின் ஜோதிட நூலான சமஸ்கிருதத்தில் 'ப்ரிஹத் சம்ஹிதா' வில் மேற்கொள்ளவேண்டுமென நினைத்தார். நினைத்தது மட்டுமல்லாமல் அவர் தனது Phdஐ 2019-ல் நிறைவும் செய்தார்.

Maharishi Panini பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மிதிலா பிரசாத் திரிபாதியின் வழிகாட்டுதலின் கீழ், 'பிருஹத் சம்ஹிதாவின் கண்ணாடி வழியாகப் பார்க்கப்பட்ட சமூக வாழ்க்கை' என்ற தலைப்பில் சசிகலா ராவல் PhD பட்டம் பெற்றார். சசிகலா ராவலுக்கு பட்டம் வழங்கும்போது, உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மகிழ்ச்சியுடன் அவரின் தைரியத்தை பாராட்டினார்.

பெரும்பாலான மக்கள் ஓய்வெடுக்க விரும்பும் இந்த வயதில் ஏன் படிக்கத் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டபோது, அதற்கு அந்த 80 வயதான பாட்டியோ தனக்கு ஜோதிடத்தில் கொள்ளை பிரியம் இருப்பதாகவும், எனது ஆர்வம் காரணமாக, விக்ரம் பல்கலைக்கழகத்தால் தொடங்கப்பட்ட ஜோதிடத்தில் எம்.ஏ படிப்பை படிப்பதற்கான வாய்ப்பை பெற்றதாக கூறினார். எம்.ஏ படிப்பை முடித்த பின்பு, தான் மேலதிக படிப்பைத் தொடர விரும்பினேன், பின்னர்தான் வராஹமிஹிராவின் 'ப்ரிஹத் சம்ஹிதா'வைப் படித்து, அதில் டாக்டர் பட்டம் பெற வேண்டுமென்ற எண்ணம் தூண்டியது என்றார்.

Also read... "40 கிலோ சாக்லெட் சாப்பிட்டேன்" - அட்லாண்டிக் கடலை கடந்து 21 வயது இளம் பெண் சாதனை!

ஜோதிடத்தைப் படித்தபோது தனது சிந்தனை வேறுபட்ட திசையில் பயணிக்க தொடங்கியதாக அந்த 80 வயதான பெண்மணி கூறினார். ஜோதிடம் வாழ்க்கையில் அத்தகைய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது என்றும், இது வரைபடங்களைப் போன்றது, இதன் மூலம் நாம் நமது இலக்கை எளிதாக நெருங்கமுடியும். ஜோதிடத்தின் நகர்வுகளைப் படிப்பதன் மூலம் நாம் நம் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள முடியும்.

வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டால் வாழ்க்கையை வழிநடத்துவது எளிது என்று ராவல் கூறினார். அவர் தனது அறிவை பொது நலனுக்காக பயன்படுத்த விரும்புகிறார், என்று ராவல் மேலும் கூறினார். இப்போதுள்ள தொழில்நுட்ப வசதிகள் பலரையும் சோம்பேறிகளாக்கியுள்ளது.ஆனால் இந்த 80 வயதான சிறுமியோ படிப்பின் மீது தனக்குள்ள ஆர்வத்தை பற்றி பெருமை பேசுகிறார். இந்த தலைமுறையினர் PhD பட்டம் பெறவில்லை என்றாலும் பரவாயில்லை மொபைலை தூக்கி ஓரம் வைத்துவிட்டு தங்களது அன்றாட பாடங்களை படித்தாலே போதும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Sanskrit

அடுத்த செய்தி