யானைக்கு உணவூட்டும் வயதான பாட்டி - மனதை நெகிழ வைக்கும் வீடியோ

யானைக்கு உணவூட்டும் வயதான பாட்டி

கேரளாவில் உள்ள யானைகள் பெரும்பாலும் " மேற்குத்தொடர்ச்சி மலைகளின் மகன்கள்" என்று அழைக்கப்படுகின்றன.

 • Share this:
  கேரளாவைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் யானைக்கு தனது கைகளால் உணவினை ஊட்டி விடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  30 நிமிடம் அடந்திய அந்த வீடியோவில் அளவில் மிக பெரிய யானை ஒன்று கேரள பெண்ணிடம் உணவினை வாங்கி உண்டு மகிழ்கின்றது. கேரள கலாச்சாரத்தில் யானைகள் மிக முக்கியமான ஒன்று. கேரளாவில் காணப்படும் யானைகள், இந்திய யானைகள், ஆசிய யானையின் அங்கீகரிக்கப்பட்ட மூன்று கிளையினங்களில் ஒன்றாகும்.  காட்டு யானைகளின் பெரிய மக்கள்தொகையுடன், கேரளாவில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கோயில்களுக்கும் தனிநபர்களுக்கும் சொந்தமானவை.  அவை கோயில்களிலும் அதைச் சுற்றியுள்ள மத விழாக்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. மேலும் ஒரு சில யானைகள் மரம் வெட்டும் இடங்களில் வேலை செய்கின்றன. கேரளாவில் உள்ள யானைகள் பெரும்பாலும் " மேற்குத்தொடர்ச்சி மலைகளின் மகன்கள்" என்று அழைக்கப்படுகின்றன.  மாநில விலங்காக, யானை கேரள மாநில அரசின் சின்னத்தில் இடம்பெற்றுள்ளது. இது திருவிதாங்கூர் மற்றும் கொச்சின் இரண்டின் அரச சின்னத்திலிருந்து எடுக்கப்பட்டது.
  Published by:Sankaravadivoo G
  First published: