கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜான மூதாட்டியை தவறான முகவரியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜான மூதாட்டியை தவறான முகவரியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

ஆம்புலன்ஸ்

யுனைடெட் கிங்டமில் கொரோனா சிகிச்சைக்கு பின் 89 வயதான மூதாட்டி ஒருவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே யுனைடெட் கிங்டமில் கொரோனா சிகிச்சைக்கு பின் 89 வயதான மூதாட்டி ஒருவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் குழுவினர் தவறுதலாக வேறு ஒருவரது வீட்டில் இறக்கி விடப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிகிச்சைக்கு பிந்தைய அலட்சியமான இந்த செயல் தொடர்பாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

89 வயது மூதாட்டியான எலிசபெத் மஹோனி என்பவர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை அடுத்து கொரோனா பதிப்பிற்காக 10 வாரங்களுக்கு மேலாக பான்ட்டிபூலில்( Pontypool) உள்ள கவுண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைக்கு பின் அதிர்ஷ்டவசமாக எலிசபெத் மஹோனி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டார். இதனை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் எலிசபெத் மஹோனியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மூதாட்டி எலிசபெத் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

மூதாட்டியின் வருகைக்காக குடும்ப உறுப்பினர்கள் காத்திருந்துள்ளனர். ஆனால் குறித்த நேரத்தில் மூதாட்டி வீடு திரும்பவில்லை. இதனால் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் கவலை அடைந்தனர். கடைசியில் மூதாட்டியை மருத்துவமனையில் இருந்து ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் குழுவினர், அவரை சரியான முகவரிக்கு அழைத்து செல்லாமல் தவறுதலாக நியூபோர்ட் என்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த பகுதி மூதாட்டியின் வீட்டிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகும். தவறுதலான முகவரிக்கு அழைத்து சென்றதோடு மட்டுமல்லாமல் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முழுமையான ஒரு அந்நியருக்கு சொந்தமான ஒரு படுக்கையில் மூதாட்டியை படுக்க வைத்து விட்டனர்.

Also read... குடும்பமே மறுத்த நிலையில் கொரோனாவால் இறந்த இந்து நபருக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லீம் சகோதரர்கள்...!

பலமணி நேரம் மூதாட்டியின் வருகைக்காக காத்திருந்த அவரது மகன் பிரையன் மஹோனி மருத்துவமனைக்கு தொடர்ந்து கால் செய்து கேட்டபடி இருந்துள்ளார். அவர்களோ உங்கள் அம்மாவை டிஸ்சார்ஜ் செய்து ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி விட்டோம் வந்து விடுவார் காத்திருங்கள் என்று கூறி உள்ளனர். நேரம் செல்ல செல்ல மூதாட்டி வீடு திரும்பாததால் மகன் மருத்துவமனைக்கு கால் செய்து தனது கவலையை தெரிவித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூதாட்டியை தவறுதலாக வேறு பகுதியில், வேறொருவர் வீட்டில் இறக்கி விட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து பிரையனுக்கு கால் செய்த மருத்துவமனை நிர்வாகம் இந்த விஷயத்தை அவரிடம் சொல்லி மன்னிப்பு கேட்டுள்ளனர். இதற்கு நோயாளி பெயர் பட்டியலில் நடந்த குலகுபடி காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அலட்சியம் குறித்த அதிகாரப்பூர்வ விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை. கொரோனவிலிருந்து மூதாட்டி மீண்டிருந்தாலும், அந்நியரின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டதால் மீண்டும் ஏதேனும் பாதிப்படைந்துள்ளாரா என்பதை பரிசோதிக்க மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டதாக அவரது மகன் தகவல் தெரிவித்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: