• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • துணி காயப்போடும் போது மூதாட்டிக்கு நடந்த விபரீதம்...!

துணி காயப்போடும் போது மூதாட்டிக்கு நடந்த விபரீதம்...!

துணி காயப்போடும் போது மூதாட்டிக்கு நடந்த விபரீதம்

துணி காயப்போடும் போது மூதாட்டிக்கு நடந்த விபரீதம்

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • Share this:
82 வயதான மூதாட்டி ஒருவர், துணி காயப்போடும் போது 19 வது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். ஆனால், கீழே விழாமல் துணி காயப்போடும் ரேக்கில் கால்கள் மாட்டிக்கொண்டு தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகிறது. கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தைப் பற்றி சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தனது டிவிட்டர் கணக்கில் பதிவு செய்திருந்தது.

இந்த நிகழ்வு சம்மந்தமாக வெளியான தகவலின் படி, 19 வது மாடியில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர், தனது பால்கனியில் குவில்ட்டைக் காயப்போட முயற்சி செய்துள்ளார். பால்கனிக்கு வெளிப்புறம் அவர் ஆடைகள் காயப்போடும் மூன்று கம்பிகள் கட்டமைக்கப்பட்டிருந்தது. மூதாட்டி குவில்ட்டை கம்பிகளில் போடும் முன்பே, வழுக்கி, தலைகீழாக கம்பிகளில் மாட்டிக்கொண்டார்.

மூன்று கம்பிகள் இருக்கும் அந்த ரேக்கில் ஒரு கால் கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது. இந்த ரேக் பால்கனி கம்பிகளோடு இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் மூதாட்டியின் எடை தாங்காமல், ஒரு பக்கமாக பால்கனியில் இணைக்கப்பட்டிருக்கும் ரேக் நீங்கி விட்டது.

மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டியைக் காப்பாற்ற தீயணைப்புப் படை வீரர்கள் அழைக்கப்பட்டனர். 19 வது மாடியில் அபாயகரமான நிலையில் மூதாட்டி தொங்கிக்கொண்டு இருந்தாலும், அப்பார்ட்மெண்ட்கள் வரிசையாக இருந்ததால், பால்கனி வழியே அவரை மீட்பது கொஞ்சம் எளிதாக இருந்தது. 19 வது மாடியில் இருக்கும் அவருடைய அப்பார்ட்மெண்ட்டில் சில தீயணைப்பு வீரர்களும், அதற்கு கீழே உள்ள 18 வது மாடியில் சில வீரர்களும் மூதாட்டியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அவர் அப்பார்ட்மெண்ட் பால்கனியில் இருண்ட வீரர்கள் அவரின் உடலில் கயிறு கட்டி, தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தவரை நேராக்க முயற்சித்தனர். கீழே உள்ள பால்கனியில் இருந்த வீரர்கள் அவரை பிடித்துக் கொள்ள, அவருக்கு எந்த காயமும் ஏற்பட்டு விடாமல் தீயணைப்பு வீரர்கள் மெதுவாக இறக்கி, காப்பாற்றிவிட்டனர். தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த நிலையில், 18 வது மாடியில் உள்ள ஆடை காயப்போடும் ரேக்கிற்கும் சில அடிகளே இடைவெளி இருந்தன. தவறி விழுந்திருந்தால் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும். ஆனால், ஒரு காயம் கூட ஏற்படாமல் மூதாட்டி காப்பற்றப்பட்டு விட்டார்.

Also read... பட்ட பகலில் சைக்கிள் திருட்டு - வீடியோவை வைரலாக்கிய நெட்டிசன்கள்

மூதாட்டி தீயணைப்பு வீரர்களால் காப்பற்றப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டிவிட்டரில் பகிர்ந்த வீடியோ இங்கே.



இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதே நேரத்தில், தீயணைப்பு வீரர்களின் முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: