பூனையைக் காப்பாற்ற 7 வயது சிறுவனை கயிற்றில் கட்டி இறக்கிய பாட்டி - திகில் வீடியோ

பூனையைக் காப்பாற்ற 7 வயது சிறுவனை கயிற்றில் கட்டி இறக்கிய பாட்டி - திகில் வீடியோ
News18
  • News18
  • Last Updated: January 10, 2020, 6:04 PM IST
  • Share this:
பூனையைக் காப்பாற்ற 7 வயது சிறுவனை ஐந்தாவது மாடியில் கயிற்றில் கட்டி இறக்கிய, பாட்டிக்கு வசவுகள் குவிந்து வருகின்றன.

இணையத்தில் இதயத்தை பதற வைக்கும் ஒரு வீடியோ வைரலாகி வந்தது. வயதான பாட்டி ஒருவர், 7 வயது சிறுவனை ஐந்தாவது மாடியில் இருந்து கயிற்றின் மூலம் கீழே இறக்கி, பூனையை காப்பாற்ற வைத்ததே அந்த வீடியோவில் இருந்த காட்சியாகும்.

வீடியோவைப் பார்த்த பலரும் அந்த பாட்டியை வசவுகளால் குவித்து விட்டனர். வீடியோவில், கட்டடத்தின் கீழே இருந்தவர்கள் பாட்டியை நோக்கி குரல் எழுப்பியும், அவர் சிறுவனை கயிற்றில் கட்டி இறக்கினார்.


விசாரணையில், இந்த சம்பவம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பென்கான் பகுதியில் நடந்துள்ளது. அந்த பாட்டியின் பெயர் டாங், கயிற்றில் கட்டி இறக்கப்பட்டது அவரின் 7 வயது பேரன் ஹு ஹு.இந்த சம்பவத்தில் அந்த சிறுவனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அபாயகரமாக இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் எனக்கு அது ஆபத்தாக தெரியவில்லை. ஆனால், வீடியோவில் பார்க்கும் போது பயமாக இருக்கிறது என்று பாட்டி கூறியுள்ளார்.
First published: January 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்