• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • இது தான் இந்தியாவின் அழகு - மகாபாரதம் டைட்டில் சாங்கை அற்புதமாக பாடி அசத்தும் முஸ்லிம் பெரியவர்!

இது தான் இந்தியாவின் அழகு - மகாபாரதம் டைட்டில் சாங்கை அற்புதமாக பாடி அசத்தும் முஸ்லிம் பெரியவர்!

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர் சகாபுதீன் யாகூப் குரேஷி சமீபத்தில் ட்விட்டரில் ஷேர் செய்துள்ள வீடியோ கிளிப்பில், ஒரு வயதான முஸ்லிம் பெரியவர் 1988 முதல் 1990 வரை தூர்தர்ஷன் டிவி சேனலில் ஒளிபரப்பான காவிய புராண சீரியலான மகாபாரதத்தின் டைட்டில் பாடலை மிகுந்த உற்சாகத்துடன் பாடுவதை காண முடிகிறது.

  • Share this:
நூற்றுக்கணக்கான மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் பல மதங்களைக் கொண்ட ஒரு வித்தியாசமான நாடு நம் இந்தியா. உலக நாடுகளை ஒப்பிடும் போது நம் நாட்டின் இந்த மாநிலவாரி கலாச்சார மற்றும் மத வேறுபாடு இந்தியாவை தனித்துவம் நிறைந்த நாடாக காட்டுகிறது. இங்கு வேறு மதத்தைச் சேர்ந்தவர், மாற்று மதத்தினரின் பெரிய பண்டிகைகளை கூட முழு மனதுடன் கொண்டாடி உற்சாகமடைவதை பார்க்க முடியும். தனியார் சேனல்களின் ஆதிக்கம் இல்லாத 1980-களின் பிற்பகுதி மற்றும் 1990-களின் முற்பகுதி ஒவ்வொரு இந்தியரும் மிகவும் விரும்பி பார்த்த தேசிய சேனல் தூர்தர்ஷன்.

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் டிவி முன் அமர்ந்து ராமாயணம் மற்றும் மகாபாரத தொடர்களை பார்த்து ரசிப்பது மறக்க முடியாத அனுபவமாக பெரும்பாலான இந்தியர்களுக்கு இருந்துள்ளது. இந்நிலையில் சுமார் 30 வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரின் முழு டைட்டில் பாடலையும், முஸ்லிம் பெரியவர் ஒருவர் அருமையாக பாடும் வீடியோ தற்போது இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர் சகாபுதீன் யாகூப் குரேஷி சமீபத்தில் ட்விட்டரில் ஷேர் செய்துள்ள வீடியோ கிளிப்பில், ஒரு வயதான முஸ்லிம் பெரியவர் 1988 முதல் 1990 வரை தூர்தர்ஷன் டிவி சேனலில் ஒளிபரப்பான காவிய புராண சீரியலான மகாபாரதத்தின் டைட்டில் பாடலை மிகுந்த உற்சாகத்துடன் பாடுவதை காண முடிகிறது.அந்த வீடியோவில் வெள்ளை நிற குர்தா, தொப்பி அணிந்து நல்ல கனமான தாடியுடன் மகாபாரத சீரியலின் பாடலை மிகவும் ரசிக்கத்தக்க வகையில் பாடுகிறார் இஸ்லாமிய பெரியவர் ஒருவர். கார் ஒன்றின் அருகில் நின்று ஆழ்ந்த ஈடுபாட்டுடன் மகாபாரதம் டைட்டில் சாங்கை பாடும் பெரியவரின் அருகில் பர்தா அணிந்த பெண் ஒருவரும் நிற்கிறார். தொடர்ந்து அவர் உற்சாகமாக பாடுவதை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுப்பதையும் சகாபுதீன் யாகூப் குரேஷி ட்விட்டரில் ஷேர் செய்துள்ள வீடியோ போஸ்ட் காட்டுகிறது.

மேலும் இந்த வீடியோவை பார்த்தால் பரபரப்பான நெடுஞ்சாலையின் ஓரத்தில் அவர்கள் காரை நிறுத்தி இந்த வீடியோவை பதிவு செய்துள்ளது போல் தெரிகிறது. பாடலின் இடையே வரும் சங்கு ஊதும் சத்தத்தை கூட அப்படியே அந்த முஸ்லிம் பெரியவர் வெளிப்படுத்தி பாடலை தொடர்வது, மத எல்லைகளுக்கு அப்பால் கடந்து மிகவும் சிரத்தையுடன் மகாபாரதத்தாய் அவர் எந்த அளவிற்கு ரசித்து மகிழ்ந்துள்ளார் என்பதை நமக்கு உணர்த்துகிறது. தவிர இந்த பெரியவரின் பாடல் மற்றும் வசன உச்சரிப்பு உண்மையில் நெட்டிசன்களை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டது என்பது குவியும் கமெண்ட்ஸ்கள் மூலம் தெரிகிறது.

Also read... பள்ளிக்கு செல்லும் சிறுமியை ஃபாலோ செய்த ஆடு - வைரலாகும் வீடியோ!

பி.ஆர்.சோப்ரா மாற்று ரவி சோப்ரா இயக்கத்தில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரத் சீரியலின் இந்த டைட்டில் சாங்கை மகேந்திர கபூர் சீரியலுக்காக பாடினார். இந்த சீரியலின் ஒவ்வொரு எபிசோட் ஸ்டார்ட் ஆகும் போதும் ராஜ் கமல் இசையமைத்த இந்த டைட்டில் சாங் ஒளிபரப்பாகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது. "வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக இந்தியா திகழ்வதை மகாபாரத கதை சீரியலின் முழு டைட்டில் பாடலையும் அழகாக பாடி உலகிற்கு உணர்த்தி உள்ளார். இது எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய இந்தியாவின் தன்மை" என்று நெட்டிசன்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

First published: