• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Viral Video : வயலினில் அசத்தும் கொல்கத்தா கலைஞர் - திறமையை அங்கீகரிக்க நெட்டிசன்கள் வலியுறுத்தல்!

Viral Video : வயலினில் அசத்தும் கொல்கத்தா கலைஞர் - திறமையை அங்கீகரிக்க நெட்டிசன்கள் வலியுறுத்தல்!

வயலினில் அசத்தும் கொல்கத்தா கலைஞர்

வயலினில் அசத்தும் கொல்கத்தா கலைஞர்

திறமையை திரையுலகினர் அங்கீகரிக்க வேண்டும். குறுகிய கால நிவாரணம் கொடுத்து உதவுவது மட்டுமல்லாமல்

  • Share this:
கொல்கத்தாவைச் சேர்ந்த நலிந்த கலைஞர் ஒருவர், பாலிவுட் மெல்லிசை பாடல்களை அற்புதமாக வயலினில் வாசித்து அசத்துகிறார்.

போகோபன் மாலி (Bhogoban Mali) கொல்கத்தாவைச் சேர்ந்தவர். வயலினின் வாசிக்கும் நலிந்த கலைஞரான இவர், கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளார். செல்லும் இடங்களுக்கு எல்லாம் வயலின் எடுத்துச் செல்லும் அவர், பாலிவுட் மெல்லிசை பாடல்களை அற்புதமாக வாசிக்கிறார்.

அவர் வயலின் வாசிக்கும் வீடியோவை பதிவு செய்த ஒருவர் டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். ஆரிப் ஷா என்பவரின் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள போகோபான் மாலி வீடியோ, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ALSO READ |  தர்ஷா குப்தாவிற்கு பர்த் டே சர்ப்ரைஸ் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய குடும்பம்!

மெட்டுக்கள் மாறாமல் அற்புதமாக வாசிப்பதாகவும், கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் அவரை வாழ்த்தியுள்ளனர். அவர் வாழ்க்கைத் தரம் குறித்து பதிவிட்டுள்ள ஆரிப் ஷா, நலிந்த கலைஞரான போகோபன் மாலி கொரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிகவும் திறமையான கலைஞர். அவரின் திறமையை திரையுலகினர் அங்கீகரிக்க வேண்டும். குறுகிய கால நிவாரணம் கொடுத்து உதவுவது மட்டுமல்லாமல், இத்தகைய கலைஞர்களின் திறமைகள் வாழ்நாள் முழுவதும் அங்கீகரிக்கப்படும் வகையிலான உதவிகளை, வளர்ந்த கலைஞர்கள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ | நிர்வாண புகைப்படங்கள் கசிந்ததால் மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்கிய ஆப்பிள் நிறுவனம்

2.5 நிமிடங்கள் இருக்கும் அந்த வீடியோவில் போகோபன் மாலி, பாலிவுட் படங்களின் கிளாசிக் பாடல்களை தேர்தெடுத்து வாசிக்கிறார். ஆஷா போஷ்லே, லதா மங்கேஷ்கர் ஆகியோர் பாடிய Diwana Hua Baadal, Ajeeb Dastan Hai Yeh உள்ளிட்ட பாடல்களை வயலினில் வாசித்து அசத்துகிறார். இதுவரை லட்சக்கணக்கான நெட்டிசன்கள் அவரின் வீடியோவுக்கு லைக்குகளையும் கமெண்டுகளையும் வாரி வழங்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திரைத்துறையினர் மற்றும் முன்னணி கலைஞர்களின் கவனத்தையும் இந்த வீடியோ ஈர்த்துள்ளது. இசையமைப்பாளர் சாவி குப்தா (Savy Gupta), போகோபான் மாலி வயலின் வாசிக்கும் வீடியோவுக்கு லைக் கொடுத்துள்ளார். வீடியோ எந்த இடத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதற்கான தகவல்கள் குறிப்பிடவில்லை.

ALSO READ | இந்தியில் ரீமேக்காகும் கைதி! ஹீரோ யார் தெரியுமா?

அவரின் இருப்பிடம் குறித்து இசையமைப்பாளர் சாவி குப்தா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள நெட்டிசன் ஒருவர், தனக்கும் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாது, கிரிஷ் பார்க் பகுதியில் அவரை அடிக்கடி பார்க்க முடியும் எனக் கூறியுள்ளார்.

 

 



 

 



 

 



 

கொரோனா காலத்தில் மக்கள் அவதிப்படும்போது, தன்னுடைய வயலின் திறமையால் அவர்களை அமைதிப்படுத்தும் போகோபான் மாலி போன்ற திறமையான கலைஞர்களுக்கு போதுமான உதவியும், அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என சில நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

இவரைப்போலவே இன்னும் வெளிச்சம் பெறாத கலைஞர்கள் அதிகமானோர் இருப்பதாகவும், அவர்களுக்கான அங்கீகாரமும் சமூகத்தில் கிடைக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: