Home /News /trend /

பேத்தி பிறந்ததில் மகிழ்ச்சி - ஹெலிகாப்டரில் அழைத்து வந்த விவசாயி..வைரல் வீடியோ!

பேத்தி பிறந்ததில் மகிழ்ச்சி - ஹெலிகாப்டரில் அழைத்து வந்த விவசாயி..வைரல் வீடியோ!

Maharashtra | அஜீத் பாண்டுராங் கூறுகையில், “எங்கள் குடும்பத்தின் புதிய வரவாகக் கருதப்படும் பேத்தி கிருஷிகாவிற்கு மாபெரும் வரவேற்பு அளிக்க நாங்கள் விரும்பினோம்’’ என்று தெரிவித்தார்.

Maharashtra | அஜீத் பாண்டுராங் கூறுகையில், “எங்கள் குடும்பத்தின் புதிய வரவாகக் கருதப்படும் பேத்தி கிருஷிகாவிற்கு மாபெரும் வரவேற்பு அளிக்க நாங்கள் விரும்பினோம்’’ என்று தெரிவித்தார்.

Maharashtra | அஜீத் பாண்டுராங் கூறுகையில், “எங்கள் குடும்பத்தின் புதிய வரவாகக் கருதப்படும் பேத்தி கிருஷிகாவிற்கு மாபெரும் வரவேற்பு அளிக்க நாங்கள் விரும்பினோம்’’ என்று தெரிவித்தார்.

    மகாராஷ்டிர மாநிலம், புனே அருகேயுள்ள பாலேவாடி பகுதியில் உள்ள விவசாயி ஒருவருக்கு சில நாட்கள் முன்பாக பேத்தி பிறந்தது. ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்தக் குழந்தையை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

    புனே புறநகரில் உள்ள பாலேவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுராங் பால்வாத்கர். இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி பேத்தி பிறந்தது. ஷேவால் வாடி பகுதியில் உள்ள தாய்மாமன் வீட்டில் அந்தக் குழந்தையும், தாயும் தங்கியிருந்தனர்.

    இந்நிலையில், மருமகளையும், பேத்தியையும் அழைத்து வருவதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்தார் அஜீத் பாண்டுராங். இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்கள் குடும்பத்தின் புதிய வரவாகக் கருதப்படும் பேத்தி கிருஷிகாவிற்கு மாபெரும் வரவேற்பு அளிக்க நாங்கள் விரும்பினோம்’’ என்று தெரிவித்தார்.

    மருமகள் மற்றும் பேத்தியை ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது குறித்த ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோ ஆகியவை இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. விவசாயி அஜித் பாண்டுராங் மற்றும் அவரது மனைவி சங்கீதா அஜீத் பால்வாத்கர் ஆகியோர் இரண்டாவது முறையாக தாத்தா - பாட்டி என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளனர். முன்னதாக இவர்களது மருமகள் அக்‌ஷதாவுக்கு கிரியான்ஷ் என்ற மகன் இருக்கிறார்.



    டிரெண்டிங் ஆகும் ஹெலிகாப்டர் வரவேற்பு

    வீட்டில் பிறக்கும் பெண் குழந்தைகளை ஹெலிகாப்டர் மூலமாக அழைத்து வருவது இது முதல் முறையல்ல. பெண் குழந்தைகளை ஹெலிகாப்டரில் அழைத்து வரும் சம்பிரதாயம் இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது. சில வாரங்களுக்கு முன் புனே அருகேயுள்ள கேத் தாலுகாவிலும் இதேபோன்று நிகழ்வு நடைபெற்றது.

    ராஜலெட்சுமி என்று பெயர் உள்ள அந்தக் குழந்தை கடந்த ஜனவரி 22ஆம் தேதி பிறந்தது. இதுகுறித்து அந்தக் குழந்தையின் தந்தை விஷால் ஜரேகர் கூறுகையில், “எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்திலும் யாருக்கும் பெண் குழந்தை கிடையாது. இத்தகைய சூழலில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தையை வீட்டிற்கு அழைத்து வரும்போது, அது சிறப்புக்குரிய வரவேற்பாக இருக்க வேண்டும் எனக் கருதினோம். இதையொட்டி ரூ.1 லட்சம் கொடுத்து ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தோம்’’ என்று கூறியிருந்தார்.

    Read More : மணமகன் சேலையில், மணமகள் வேட்டியில் -  பராம்பரிய பழங்குடி திருமண சடங்கின் ஆச்சரிய தகவல்கள்


    வரவேற்பும், எதிர்ப்பும்

    இந்திய சமூகத்தில் முன்பெல்லாம் பெண் குழந்தைகள் பெற்றெடுப்பதை பெரும்பாலானோர் விரும்பவில்லை என்ற சூழலில், தற்போது பெண் குழந்தைகளின் பிறப்பை கொண்டாட்டமாக கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் கொண்டாட்டம் வரவேற்புக்குரியது என்றாலும், பச்சிளம் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்தும் வரும் நிகழ்வு குறித்து விமர்சனம் எழுகிறது.

    அதாவது, ஹெலிகாப்டர் புறப்படும்போதும், தரையிறங்கும் போதும், மிக அதிகமான சத்தம் வெளிவரும் நிலையில், பச்சிளம் குழந்தையின் செவிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மருத்துவத் துறை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Maharashtra, Trending, Viral

    அடுத்த செய்தி