பிரசாரத்தில் ஒலித்த விஜய் ரசிகர் குரல்... முதல்வர் ரியாக்‌ஷன்

பிரசாரத்தில் ஒலித்த விஜய் ரசிகர் குரல்... முதல்வர் ரியாக்‌ஷன்

விஜய் | தமிழக முதல்வர்

பிரசாரத்தின் போது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த விஜய் மக்கள் இயக்கத்தினருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

 • Share this:
  தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் நாளையுடன் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் சேலம் எடப்பாடி தொகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, தன்னை மீண்டும் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

  மேலும் பேசிய அவர், “தமிழகம் முழுவதும் எத்தனையோ தொகுதிகளில் பிரசாரம் செய்திருந்தாலும் வனவாசியில் பேசுவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் வீட்டில் ஒருவனாக இருந்து உங்களை சந்திக்கிறேன். நான் மீண்டும் முதலமைச்சராக, இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.

  உங்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த வெற்றி அமைய வேண்டும். தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி எடப்பாடி என்று அமையும் வகையில் வாக்களியுங்கள் இதுவரை எந்த முதலமைச்சரும் அவரது சொந்த தொகுதிக்கு இத்தனை முறை ( 65 முறை) சென்றிருக்கமாட்டார்கள்.

  மு.க.ஸ்டாலினை போல் மற்றவர்கள் பேச்சை கேட்பதில்லை.எனது சொந்த யோசனையில் செயல்பட்டு வருகிறேன். இந்த தேர்தலே திமுக விற்கு இறுதி தேர்லாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி இறந்தபோது, எம்.ஜி.ஆர் சமாதி அருகே இடம் கொடுக்க மறுத்தவர் கருணாநிதி. முதலமைச்சராக இருந்து, நாட்டுக்காக உழைத்த காமராஜர் இறந்த போது, இடம் கொடுக்க முடியாது என மறைந்த முதல்வர் கருணாநிதி சொன்னார்.

  அதே பானியில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க முடியாது என்று சொன்னோம். முன்னாள் முதலமைச்சர் இறந்தால் மெரினாவிடம் இடம் இல்லை என கருணாநிதி தான் எழுதி வைத்துவிட்டார். முதல்வர் கருணாநிதிக்கு 46,000 சதுர அடி இடம் ஒதுக்கினேன். ஆனால் ஆறு அடி இடம் கொடுக்க மறுத்துவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். இது சட்டத்தின் ஆட்சி. மு.க.ஸ்டாலினின் நடிப்பை இனியும் மக்கள் நம்பமாட்டார்கள்” என்றார்.

  முதல்வர் பிரசார வாகனத்தில் பேசிக்கொண்டிருந்த போது நான் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஆதரவு தருகிறேன் என்று குரல் ஒலிப்பதைக் கவனித்த எடப்பாடி பழனிசாமி அனைவரிடமும் அதைக்கூறி நன்றி தெரிவித்தார்.
  Published by:Sheik Hanifah
  First published: