சைவ உணவு, அசைவ உணவு, வீகன் உணவு என்று பல வித உணவுப்பழக்கங்கள் உள்ளன. உணவுப்பழக்கம் நம் உடல் ஆரோக்கியத்தோடு மட்டும் தொடர்புடையது மட்டும் அல்ல. பருவ நிலை மாற்றத்துடனும் நம் உணவுகள் தொடர்பு கண்டுள்ளன. இறைச்சி உணவுகளை சாப்பிடுவது என்பது, சுற்று சூழல் பாதிப்புக்கு கணிசமான அளவுக்கு காரணமாக இருக்கின்றன. சுற்றுசூழல் பாதிப்பை குறைக்க வேண்டும் என்பதோடு, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைக்கும் எந்த விதமான பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது என்பதில் கிட்டத்தட்ட உலகில் எல்லா நாடுகளுமே முயற்சி செய்து வருகின்றன.
வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்ற காரணத்தால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் உலகமே ஈடுபட்டுள்ளன நிலையில், பருவ நிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கு தாவர அடிப்படையிலான இயற்கை இறைச்சி உணவுகளை சாப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும் என்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது
தாவர அடிப்படையிலான இறைச்சி உணவுகளை உண்பது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் ஒரு படி முன்னேறிச் செல்ல உதவும். அமெரிக்காவின் மிகப்பெரிய ஒரு ஆலோசனை நிறுவனத்தின் ஆய்வின்படி, தாவர அடிப்படையிலான இறைச்சி உற்பத்தித் தொழிலில், மின்சார வாகனங்களை விட குறைவான கிரீன் கவுஸ் வாயு உமிழ்வு வெளியேறுகிறது. எனவே, நீங்கள் செலவிட விரும்பும் தொகையில், குறிப்பிட்ட அளவு, ஒரு சிலவற்றை மாற்றும் காலநிலைக்கு ஏற்ற பொருட்களுக்கு செலவு செய்து வாங்கினால், தாவர அடிப்படையிலான இறைச்சி ரீப்லேஸ்மென்ட் பொருட்களை வாங்கலாம்.
பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் (BCG) நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, தி கார்டியன், தாவர அடிப்படையிலான உணவு தயாரிப்புகள், காலநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் உதவக்கூடிய, மிகவும் பயனுள்ள முதலீடுகள் என்று வெளியிட்டுள்ளது. மேலும், ஆய்வின்படி, தாவர அடிப்படையிலான உணவுகளில் முதலீடு செய்வது, மிகச்சிறந்த முதலீடாக இருக்கும் என்று கூறியுள்ளது.
அதாவது, தாவர அடிப்படையிலான இறைச்சி மற்றும் தாவர பால் (plant milk) பொருட்களின் உற்பத்தியில் முதலீடு செய்வது எலக்ட்ரிக் கார்களில் முதலீடு செய்வதை விட 11 மடங்கு அதிகமாகவும், பசுமை சிமெண்டில் முதலீடு செய்வதை விட 3 மடங்கு அதிகமாகவும், பசுமை கட்டிடங்களில் முதலீடு செய்வதை விட 7 மடங்கு அதிகமாகவும், கிரீன்ஹவுஸ் வாயுவைக் குறைக்கும்.
கால்நடை வளர்ப்பினால் ஏற்படும் மாசுபாடு உலக அளவில் வெளியேறும் கிரீன் ஹவுஸ் கேஸ் வெளியேற்றத்தில் சுமார் 15% அளவுக்கு உள்ளது. இது உலகின் மிகப்பெரிய மாசுபாடுகளில் ஒன்றாகும். மேலும், CO2 உமிழ்வுகள் கால்நடைகளுக்கு உணவளிப்பது மற்றும் கால்நடைகளால் நேரடியாக வெளியிடப்படும் மீத்தேன் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும்.
BCG வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “2035 ஆம் ஆண்டுக்குள், விலங்கு இறைச்சிக்கு மாற்றாக, தாவர இறைச்சி புரதங்கள் உற்பத்தியில் 11% அடையும் அளவுக்கு நாம் தொடர்ந்து செயல்பட்டால், 2030 ஆம் ஆண்டு ரீதியில், உலகளவில் 0.85 ஜிகா டன் அளவுக்கு சமமான CO2 (CO2e) குறைவதைக் காண முடியும்" கூறப்பட்டுள்ளது.
தாவர அடிப்படையிலான உணவுகள் முதல் செல்-கல்ச்சர்டு வளர்ப்பு இறைச்சி மற்றும் டெம்பே போன்ற புளிக்கவைக்கப்பட்ட பொருட்கள் வரை, தற்போது சந்தையில் மாற்று பொருட்கள் மிகச் சிறிய அளவுக்கு பங்களித்திருக்கிறது. அதாவது, இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்கள் விற்பனையின் 2% அளவில் தான் தாவர மாற்று பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால், இந்தத் துறை பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. “2020 ஆம் ஆண்டில், நிதி முதலீடு செய்யும் சுற்றுகளில், சுமார் 60% முதலீட்டுக்கு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த எண்ணிக்கை 2021 இல் குறைந்தது. ஆனாலும், செல் மற்றும் என்சைம் அடிப்படையிலான புரதங்கள் விரைவாக வளர்வதன் காரணமாக, துணிச்சலாக மற்றும் குறைந்த அளவில் முதலீடு என்பது கார்ப்பரேட் நிறுவனங்களை ஈர்த்துள்ளது. எனவே, கார்ப்பரேட் நிறுவனங்கள் மதிப்புமிக்க, அதிக பணம் தேவைப்படாத முதலீடுகளை தொடர்ந்து செலுத்தி வருகின்றன," என்று BCG அறிக்கை விளக்குகிறது.
Published by:Vijay R
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.