ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஃபுட் சேலஞ்ச்.. சமோசா சாப்பிட்டால் ரூ.51,000 பரிசு.. மிரள வைக்கும் போட்டி!

ஃபுட் சேலஞ்ச்.. சமோசா சாப்பிட்டால் ரூ.51,000 பரிசு.. மிரள வைக்கும் போட்டி!

Bahubali Samosa | ஒரே ஒரு சமோசாவை நீங்கள் 30 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு விட்டால் உங்களுக்கு ஆயிரக்கணக்கான ருபாய் பரிசு கிடைக்கும்.

Bahubali Samosa | ஒரே ஒரு சமோசாவை நீங்கள் 30 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு விட்டால் உங்களுக்கு ஆயிரக்கணக்கான ருபாய் பரிசு கிடைக்கும்.

Bahubali Samosa | ஒரே ஒரு சமோசாவை நீங்கள் 30 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு விட்டால் உங்களுக்கு ஆயிரக்கணக்கான ருபாய் பரிசு கிடைக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உணவு மற்றும் தின்பண்டங்களை சார்ந்த மிகவும் சுவாரஸ்யமான பல வீடியோக்கள் அடிக்கடி சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. தங்கள் கடை அல்லது ரெசிபிகளை பிரபலமாக்க பல ரெஸ்டாரன்ட்கள், கஃபேக்கள் ஃபுட் சேலஞ்சை நடத்தி வருகின்றன. ஃபுட் சேலஞ்சை வியாபார யுக்தியாக பயன்படுத்தி வரும் பல கடைகள் நிச்சயம் ஒருவரால் எளிதில் சாப்பிட முடியாத வகையில் தான் சவால்களை விடுக்கின்றன.

சவாலில் நீங்கள் ஜெயித்து விட்டால் உங்களுக்கு கணிசமான ரொக்க பரிசையும் வழங்குகிறோம் என்று விளம்பரப்படுத்துகின்றன. அப்படிப்பட்ட ஒரு சவால் தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. ஆனால் இங்கே சேலஞ்ச் லிஸிட்டில் இருப்பது நம் அனைவருக்கும் விருப்பமான சமோசா தான். அதிலும் ஒரே ஒரு சமோசாவை நீங்கள் சாப்பிட்டு விட்டால் உங்களுக்கு ஆயிரக்கணக்கான ருபாய் பரிசு கிடைக்கும். உடனே உங்கள் மனதில் தோன்றி இருக்குமே, ஒரே ஒரு சமோசா சாப்பிடுவதெல்லாம் ஒரு சவாலா? யார் வேண்டுமானாலும் அசால்ட்டாக சாப்பிட்டு விடலாமே.. இதை சாப்பிடுவதற்கு எவ்வளவு ரொக்கம் பரிசு தருகிறார்கள் என்று கூட கேட்கலாம்.

ஒருவேளை நீங்கள் ஃபுட்டி என்றால் நிச்சயம் யூகித்திருப்பீர்கள் ஒரு சமோசாவிற்கு சவால் விடுக்கப்படுகிறது என்றால் நிச்சயம் அது நார்மல் சைஸ் கொண்டதாக் இருக்காது என்று. எனினும் அப்போதும் உங்களுக்கு பரிசு பணம் பற்றிய கேள்வி எழாமல் இருக்காது. சரி, ஒரே ஒரு சமோசாவை சாப்பிட குறிப்பிட்ட கடை எவ்வளவு பரிசு தொகை அறிவித்துள்ளது என்பதை முதலில் பார்த்து விடுவோம். உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் அமைந்துள்ள kaushal sweets என்ற கடை தான் இந்த சமோசா சேலஞ்சை விடுத்துள்ளது. இதை வெற்றி பெற்றால் கிடைக்க போகும் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.51,000. ஆம் நீங்கள் படிப்பது கனவல்ல. நிஜம் தான்...

இப்போது புரிகிறதா இந்த சமோசா சேலஞ்ச் ஏன் சோஷியல் மீடியாவில் வைரலானது என்று.!! இந்த சமோசாவிற்கு 'பாகுபலி சமோசா' என்று பெயரிட்டுள்ளனர். இதன் மொத்த எடை 8 கிலோ என கூறுகின்றனர் குறிப்பிட்ட கடையினர். 8 கிலோ கொண்ட இந்த ஜம்போ சமோசாவை சாப்பிடுவோருக்கு தான் ரூ.51,000 கேஷ் பிரைஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ”செல்லத்தை தூக்கிட்டு வாங்க”... வயலில் இறங்கி வேலை பார்க்கும் நாயின் வைரல் வீடியோ!

இப்போது இந்த சவால் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் அதிகம் வைரலாக காரணம் பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தான். சமீபத்தில் இவர் தனது ட்விட்டரில் பாகுபலி சமோசாவை கையில் வைத்து கொண்டு திகைத்து பின் அருகில் உள்ள டேபிள் மீது வைக்கும் இளம்பெண் ஒருவர் இருக்கும் வீடியோவை ஷேர் செய்து இருக்கிறார். இதற்கு "இன்று ஒரு சமோசாவுக்கு மேல் சாப்பிட கூடாது என்று என் மனைவி உத்தரவிட்டிருக்கிறார்" என்று வேடிக்கையாக கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

வீடியோவில் இருக்கும் ராட்சத சமோசாவின் விலை ரூ.1,100 என்றும், இந்த பாகுபலி சமோசாவை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவருக்கு ரூ.51,000 ரொக்கப் பரிசு கிடைக்கும் என்றும் குறிப்பிட்ட கடை அறிவித்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த வீடியோ இதுவரை 4.98 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும், 4,000-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. சமீபத்தில் ஹர்ஷ் கோயங்கா ஷேர் செய்த இந்த வீடியோ சற்று பழையது. ஏனென்றால் இதே வீடியோ சில மாதங்களுக்கு முன் பேசு பொருளானது. இருந்தாலும் மீண்டும் பார்த்த பலரும் இந்த பெரிய சமோசாவை எப்படி செய்திருப்பார்கள் என்று ஆச்சரியம் அடைவதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இதனிடையே இதுவரை யாரும் ரூ.51,000 ரொக்க பரிசை பெறவில்லை என்று கடை உரிமையாளர் கூறி இருக்கிறார்.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Trending, Viral Video