பூமியில் வேகமாக குறைந்து வரும் ஆக்ஸிஜன் - உயிர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு!

மாதிரி படம்

நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன், வளிமண்டலத்தில் இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்று ஒரு புதிய ஆய்வு வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
எலோன் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது பற்றி பேசிக்கொண்டிருக்கலாம், பில் கேட்ஸ் காலநிலை மாற்றத்தை மாற்றியமைப்பது பற்றியும் பேசலாம் ... அதற்குள் நாம் சுவாசிக்கும் காற்று பூமியை விட்டு சீக்கிரம் வெளியேறக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன், வளிமண்டலத்தில் இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்று ஒரு புதிய ஆய்வு வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது. Nature Geoscience இதழில் வெளியிடப்பட்ட ஆய்வானது, “பூமியில் உள்ள வளிமண்டல ஆக்ஸிஜனின் ஆயுட்காலம்” என்ற தலைப்பில் ஆய்வை வெளியிட்டுள்ளது. மேற்கூறிய மாற்றம் உடனே நடக்காவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக நம் உயிர் வாயு பூமியிலிருந்து விரைவாக வெளியேறிவிடும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் 2.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த "The Great Oxidation Event"-க்கு நம் கிரகத்தை கொண்டு செல்லும். "பூமியின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அடிப்படையிலான பயோசிக்னேச்சர்களின் ஆயுட்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது, குறிப்பாக தொலைதூர எதிர்காலத்திற்கு அவற்றின் ஆயுட்காலம் மோசமானது" என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளார்கள்.

ஆக்ஸிஜனின் பற்றாக்குறை எப்படி இருக்கும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் விளக்குகிறார்கள், "வளிமண்டல ஆர்க்கீயன் பூமியில் கடந்த காலத்தில் நடந்ததைப்போல் இப்போதும் O2 வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது, பூமியின் காலநிலை அமைப்பில் ஈரமான பசுமை இல்ல நிலைமைகள் தொடங்கப்படுவதற்கு முன்பும், மேற்பரப்பு நீரின் வேகமான இழப்புக்கு முன்பும் வளிமண்டலத்திலிருந்து அவை தூண்டப்படலாம்." இது தவிர்க்க முடியாதது என்றும் “எதிர்கால டீஆக்ஸிஜனேற்றம் என்பது சூரிய கதிர்களின் பாய்ச்சல்களை அதிகரிப்பதன் தவிர்க்க முடியாத விளைவு ஆகும்,

அதேசமயம் அதன் துல்லியமான நேரம் பூமியின் கவச பகுதிக்கும் கடல்-வளிமண்டல-மேலோடு அமைப்புக்கும் இடையிலான சக்தியைக் குறைப்பதற்கான பரிமாற்றப் பாய்வுகளால் மாற்றியமைக்கப்படுகிறது” என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சூரியனில் இருந்து அதிகரிக்கும் கதிர்வீச்சு சுமார் 2 பில்லியன் ஆண்டுகளுக்குள் நமது பூமியில் உள்ள கடல் நீரை உறிஞ்சும் என்று விஞ்ஞானிகள் முன்பு கணித்திருந்தனர், ஆனால் இந்த புதிய மாடல் - சராசரியாக 400,000 உருவகப்படுத்துதல்களின் அடிப்படையில் ஆக்ஸிஜனைக் குறைப்பது முதலில் உயிர்களைக் கொல்லும் என்று கூறுகிறது.

Also read... தேசிய பாதுகாப்பு வாரம்: இந்தியாவின் சாலை பாதுகாப்பு விதிகள் பற்றிய குறிப்புக்கள்!

"ஆக்ஸிஜனின் வீழ்ச்சி மிகவும் தீவிரமானது" என்று ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த பூமி விஞ்ஞானி (Earth scientist) கிறிஸ் ரெய்ன்ஹார்ட் கூறியதாக ஆய்வின் விஞ்ஞானிகள் செய்தி வெளியிட்டுள்ளனர்." நாம் இப்போது நம்மிடையே இருக்கும் ஆக்ஸிஜனை விட ஒரு மில்லியன் மடங்கு குறைவான ஆக்ஸிஜனைப் பற்றி பேசுகிறோம்." உயிர்களை காப்பாற்றும் ஆக்ஸிஜனைத் தவிர மற்ற பயோசிக்னேச்சர்களை பற்றி ஆராய்ச்சிகள் மூலம் நாம் இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தினர்.

பூமியில் எவையும் நிரந்தரமில்லை அதில் கண்ணுக்கு தெரிந்ததும் கண்ணுக்குத் தெரியாததும் என அனைத்தும் அடங்கும் அந்த வகையில் மேல் சொன்ன ஆய்வு உண்மையில் பலரையும் சிந்திக்க வைக்கும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: