Home /News /trend /

இன்று அப்ஹீலியன் தினம்: இதற்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு

இன்று அப்ஹீலியன் தினம்: இதற்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு

சூரியனை விட்டு தூரத்தில் இருக்கும் பூமி

சூரியனை விட்டு தூரத்தில் இருக்கும் பூமி

Aphelion day: பூமி சூரியனுக்கு மிக அருகில் ஒரு நாளும், மிகா தொலைவில் ஒரு நாளும் இருக்கும். சூரியனை விட்டு விலகி மி தூரத்தில் இருக்கும் நாள் இன்று

இந்த சூரிய மண்டலம் என்பது சூரியன் அதை சுற்றிவரும் 8 கோள்களால் ஆனது. ஒவ்வொரு கோளும் தனக்கென தனி பாதையில் சூரியனை சுற்றி வருகிறது.

பூமி சூரியனை ஒரு வட்டப்பாதையில் சுற்றி வருவதாக நீண்ட காலமாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் 17 ஆம் நூற்றாண்டில் ஜெர்மன் வானியலாளர் ஜோஹன்னஸ் கெப்லர் தனித்துவமான நீள்வட்ட சுற்றுப்பாதையை கண்டுபிடித்தார்.

நீள்வட்ட பாதையும் சரியாக சூரியனை நடுவில் கொண்டது இல்லை. ஒரு பக்கமாக அமைந்திருக்கும்.

பெரிஹிலியன், அப்ஹீலியன்:



பூமி சூரியனுக்கு மிக அருகில் சில காலம் அமைந்திருக்கும். அதிலும் குறிப்பிட்ட நாளில் மிக நெருக்கமான புள்ளியில் இருக்கும். இதை பெரிஹிலியன் (perihelion) என்பார்கள். கிரேக்கத்தில் 'பெரி' என்றால் அருகில் என்று பொருள்.

பூமி சில காலம் சூரியனை விட்டு தொலைவிற்கு நகரும். இதை அப்ஹீலியன் (aphelion) என்பார்கள். கிரேக்கத்தில் 'அப்போ' என்றால் தொலைவு என்று பொருள்.அந்த அப்ஹீலியன் நாள் தான் இன்று.

பெரிஹீலியன் டிசம்பர் சங்கராந்திக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு வரும். ​​​​ஜூன் சங்கராந்திக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, வடக்கு அரைக்கோளத்தில் கோடை காலத்தில் அப்ஹீலியன் நிகழ்கிறது.

அமேசான் பிரைம் யூஸர்களா நீங்கள்.? இரண்டே கிளிக்குகளில் உங்களது சந்தாவை ரத்து செய்யலாம்..!

எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம்…

சராசரியாக சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் அளவை வானியல் அலகு (astronomical unit) என்பார்கள். 149.6 மில்லியன் கிலோமீட்டர் தான் ஒரு வானியல் அலகு. இதிலிருந்து 1.67 சதவிகிதம் அதிகரித்து 152.1 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இன்று சூரியன் அமைந்திருக்கும். இன்று மதியம் இந்திய நேரப்படி 12 30 க்கு பூமி அதன் சுற்று வட்டப் பாதையில் சூரியனை விட்டு மிக தொலைவான புள்ளியில் இருக்கும்.

அடுத்து 2023 ஜனவரி 4 அன்று சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரியனை வெறும் கண்ணால் பார்க்க முயலாதீர்கள். கண்ணிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அறிவுறுத்துகின்றனர்

 
Published by:Ilakkiya GP
First published:

Tags: Sun

அடுத்த செய்தி