• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 3.5 கோடி ரூபாய் கேட்டு வருமானவரித்துறை நோட்டீஸ் - ரிக்ஷா ஓட்டுநர் அதிர்ச்சி!

3.5 கோடி ரூபாய் கேட்டு வருமானவரித்துறை நோட்டீஸ் - ரிக்ஷா ஓட்டுநர் அதிர்ச்சி!

ரிக்ஷா ஓட்டுநர்

ரிக்ஷா ஓட்டுநர்

படிப்பறிவு இல்லாத அவர், அந்த ஜெராக்ஸ் கார்டை ஒரிஜினல் என நினைத்து இதுநாள் வரை வைத்திருந்துள்ளார்.

  • Share this:
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரிக்ஷா ஓட்டுநருக்கு 3.5 கோடி ரூபாய் செலுத்துமாறு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா பகுதியில் வசித்து வருபவர் பிரதாப் சிங். ரிக்ஷா ஓட்டுநரான அவர் நாளொன்றுக்கு 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், அக்டோபர் 19 ஆம் தேதி வருமானவரித்துறை அவரை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டுள்ளது. அப்போது, 2018 -19 ஆம் நிதியாண்டில் உங்களது பான் கார்ட் மூலம் 43.44 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாகவும், அதற்கு 3.47 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளான அவர், நேரடியாக வருமானவரித்துறை அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.அங்கு தன்னுடைய பான் கார்டை அதிகாரிகளிடம் காட்டிய அவர், ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வருவதையும் தெரியப்படுத்தியுள்ளார். இது அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியாக இருந்ததுள்ளது. உடனடியாக காவல்துறையில் சென்று இது குறித்து புகார் அளிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்படி, காவல்நிலையத்துக்கு சென்ற பிரதாப் சிங், தன் பான் கார்டை மோசடியாக பயன்படுத்தி நிதிப்பரிவர்த்தனை நடைப்பெற்று வருவதையும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றாலும், இதுகுறித்த விசாரணையை துவங்கியுள்ளனர். பிரதாப் சிங், 2018 ஆம் ஆண்டு பான் கார்டுக்கு அப்ளை செய்துள்ளார். அப்போது அவருக்கு வந்த கொரியரில் பான்கார்டின் ஜெராக்ஸ் மட்டுமே இருந்துள்ளது.

படிப்பறிவு இல்லாத அவர், அந்த ஜெராக்ஸ் கார்டை ஒரிஜினல் என நினைத்து இதுநாள் வரை வைத்திருந்துள்ளார். ஆனால், உண்மையான அவருடைய பான்கார்டு பிரதாப் சிங்கிற்கு செல்லவில்லை. அவருடைய கார்டை மோசடியாக பயன்படுத்தி, டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நிதிப் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்துள்ளது. இதுகுறித்து பேசிய பிரதாப் சிங், " நான் மதுராவில் வசித்து வருகிறேன். என் வீட்டில் என்னுடன் சேர்ந்து 5 பேர் உள்ளோம். ஆட்டோ ஓட்டி என் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன்.

Also read... மார்வெல்லையே மிஞ்சும் ‘சூப்பர் ஹீரோ’ இவர் தான் - ஆனந்த் மஹிந்திரா ட்வீட்!

அக்டோபர் 19 ஆம் தேதி எனக்கு வருமானவரித்துறையிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது, என் பான் கார்டு மூலம் 44 கோடி ரூபாய் நிதிப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாகவும், அதற்காக 3.5 கோடி ரூபாய் வருமானவரி கட்டுமாறும் அதிகாரிகள் கேட்டனர். நான் அதிர்ச்சியின் விளிம்புக்கே சென்றுவிட்டேன்.

என் வாழ்நாளில் அவ்வளவு தொகையை கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. நேரடியாக வருமானவரித்துறை அலுவலகத்துக்கு சென்று, என் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறினேன். அதிகாரிகள், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். நானும் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டேன். அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்" என கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: