Home /News /trend /

வேலைவாய்ப்பு கிடைக்காமல் கல்லூரி அருகே டீ விற்கும் பட்டதாரி பெண்..

வேலைவாய்ப்பு கிடைக்காமல் கல்லூரி அருகே டீ விற்கும் பட்டதாரி பெண்..

காட்சி படம்

காட்சி படம்

பீகாரில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்த இளம்பெண் ஒருவர் டீ கடை வைத்து நடத்திவருகிறார்.

பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள மகளிர் கல்லூரி அருகே பெண் ஒருவர் டீ கடை திறந்துள்ளார். கல்லூரி அருகே டீ கடை திறக்கப்படுவது வழக்கமான விஷயம் தான் என்றாலும் கூட, அந்தக் கடை திறந்திருப்பவர் ஒரு எக்கனாமிஸ் பட்டதாரி என்பதே கூடுதல் சிறப்பம்சமாக இருக்கிறது.

பிரியங்கா குப்தா என்ற இந்தப் பெண் கடந்த 2017ஆம் ஆண்டில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து முதுகலை பட்டமும் பெற்ற அவர், வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், “எனது முதுகலை பட்டப்படிப்பை நான் 2019ஆம் ஆண்டில் நிறைவு செய்தேன். அதற்குப் பிறகு 2 ஆண்டுகளாக வேலையின்றி தவித்து வந்தேன். இளம் வயதில் பல கிளைகளைக் கொண்ட டீ நிறுவனத்தை நடத்தி வரும், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபுல் பில்லோரை பார்த்து எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. பல ஆண்கள் டீ கடை நடத்துகின்றனர். பெண் ஒருவர் டீ கடை நடத்தக் கூடாதா?’’ என்றார்.

பிரியங்காவின் முடிவுக்கு பாராட்டு: 

படித்த படிப்புக்கு தகுந்த நல்ல வேலைவாய்ப்பு கிடைக்காத சூழலில், பட்டதாரிகள் பலரும் கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டு, சுமாரான வருவாய் ஈட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில், எதிர்பார்த்த வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்ற சூழலில், தானே நேரடியாக சிறுதொழில் தொடங்கியுள்ள பிரியங்காவை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

டீ கடை தொடங்கும் என்ற அதிரடி முடிவை, பட்டதாரி ஒருவர் எடுத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். அதே சமயம், அவரது மன தைரியம் பாராட்டத்தகுந்தது என்று சிலர் தெரிவிக்கின்றனர். எந்தவொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு இதுபோன்ற வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

also read : ஒரே சைக்கிளை ஓட்டும் 2 சிறுவர்களின் வீடியோ.. ஆனந்த் மஹிந்திரா ட்வீட் வைரல்பிரதமர் மோடியுடன் ஒப்பீடு: 

நாட்டின் பிரதமராக உள்ள நரேந்திர மோடியும் இளமை காலத்தில் டீ விற்றவர் தான் என்றும், அதையே நம் வாழ்க்கைக்கான ஊக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒரு பயனாளர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “பெற்றோர் தங்கள் குழந்தைகள் ஒவ்வொருவரையும் டீ கடைக்காரராக உருவாக்க ஊக்கம் அளிக்க வேண்டும். கடந்த 2014ஆம் ஆண்டு இதற்கு ஊக்கமளிக்கும் கதை இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

also read : ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகளாக வேலை செய்யும் முதியவர்.. தோனியை விட கூலா இருக்காருப்பா!

அனுராக் அசிஸ் என்ற பயனாளர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு தலைமுறையினருக்கு ஊக்கம் அளிப்பவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். இந்திய பொருளாதாரத்திற்கு நல்ல பலன்களை கொடுப்பதாக டீ கடைகள் அமையும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனாளர் வெளியிட்டுள்ள பதிவில், “சில டீ கடைக்காரர்கள் மாதம் ஒன்றுக்கு கிரேட் 1 ரேங்கில் உள்ள அதிகாரியைக் காட்டிலும் கூடுதலாக சம்பாதிக்கின்றனர். ஆகவே, பிரியங்காவை நாம் ஊக்குவிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending

அடுத்த செய்தி