அடுக்குமாடி கட்டடத்தின் பால்கனி மீது நின்று நிர்வாணப் புகைப்படத்தை எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட பெண்கள் குழுவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
துபாய் மரினா பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி கட்டடத்தின் பால்கனி ஒன்று மீது பல பெண்கள் நிர்வாணமாக நின்றவாறு போஸ் கொடுத்துள்ளனர். இதனை அந்தக் கட்டத்தில் வசிக்கும் ஒருவர் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றின் மீது இருந்து பெண்கள் நிர்வாணமாக எடுத்த புகைப்படம் டிவிட்டரில் வெளியானது. இதனையடுத்து அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த துபாய் காவல்துறையினர், அந்த புகைப்படத்தில் இருப்பவர்களையும் அதிரடியாக கைது செய்துள்ளது.
இது குறித்து துபாய் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக அந்த பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களின் செயல் மிகவும் தரம்தாழ்ந்தது மற்றும் மோசமானது என காவல்துறை கூறியுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள காவல்துறை, சட்டவிதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்ட அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.
விளம்பரத்துக்காக பெண்கள் குழுவினர் இத்தகைய கீழ்தரமான செயலில் ஈடுபட்டிருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை பொதுவெளியில் முத்தமிட்டால், அல்லது உரிமம் இல்லாமல் மது அருந்தினால் கடுமையான தண்டனை விதிக்கப்படுவது வழக்கம். இத்தகைய கடுமையான சட்டங்கள் இருக்கும் நிலையில் அந்த பெண்கள் விளம்பரத்துக்காக செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இருப்பினும், கைது செய்யப்பட்ட பெண்களுக்கு 6 மாத சிறை தண்டனையுடன், பொது ஒழுங்கு சட்டங்களை மீறியதற்காக ஆயிரம் பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
Also read... ஆபாச தளங்களில் விதிகளை மீறி கொட்டி கிடக்கும் 'பாலியல் வன்முறை வீடியோக்கள்' - எச்சரிக்கும் ஆய்வு...!
இதற்கு முன்னரும் பொதுவெளியில் முத்தமிடுதல் மற்றும் உரிமம் இல்லாமல் மது அருந்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ள துபாய் காவல்துறை, நடைமுறையில் இருக்கும் சட்டங்களை சுட்டிக்காட்டி, மக்கள் அதனை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மீறுவோர் காவல்துறையின் பிடியில் இருந்தும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என எச்சரித்துள்ளது.
மேலும், இணையவழி சூதாட்டம், ஆபாச படங்கள் உள்ளிட்டவைகளை ஊக்குவிப்போர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும், அதில் 2,50,000 டாலர் முதல் 500,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது. இஸ்லாமிய நாடான துபாயில் மத கட்டுப்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, அதற்கேற்ப சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.