இன்னும் சில நாடுகளில் அரசர், பட்டத்து இளவரசர், வாரிசு என்று மன்னராட்சி தொடர்ந்து வருகிறது. அதில் ஒன்று தான் சவூதி அரேபியா. அரேபிய அரச பரம்பரை பழக்க வழக்கங்கள், ஆடம்பரமான பொருட்கள், வசதிகள் பற்றிய செய்திகள் வெளிவரும் போதெல்லாம் ஆச்சரியமாகவே இருக்கும். அதே போலவே, சமீபத்தில் வெளியான துபாய் இளவரசரின் செல்ஃபி ஒன்று வைரலாகி வருகிறது. நாட்டை ஆளும் குடும்பத்தின் வாரிசுகளின் புகைப்படங்களுக்கு எப்போதுமே பெரிய அளவில் வரவேற்பு இருக்கும். ஆனால், இந்த புகைப்படத்துக்கு பின்னே சுவாரஸ்யமான கதை இருக்கிறது.
துபாயின் பட்டத்து இளவரசர் சமீபத்தில் யூகேவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டனில் டியூப் டிரெய்ன் மிகவும் பிரபலமானது. லண்டனில் டியூப் டிரெயின் என்பது சுரங்கப்பாதை ரயிலாகும். தனது சுற்றுலா பயணத்தின் ஒரு அங்கமாக லண்டன் டியூபில் துபாய் இளவரசரும் பயணித்துள்ளார். பொதுவாக எந்த நாட்டு இளவரசராக இருந்தாலும் மற்ற நாடுகளில் இருப்பவர்களுக்கு அவரை பற்றி தெரியும், புகைப்படங்களைப் பார்த்திருப்பார்கள்.
எளிதாக அடையாளம் காண முடியும். ஆனால் லண்டன் ரயிலில் துபாய் இளவரசரை யாருமே அடையாளம் கண்டுகொண்டதாக தெரியவில்லை. கூட்டத்தில் ஒருவராக பயணிகளோடு பயணியாக, துபாய் இளவரசர் லண்டனில் பயணம் செய்யும் போது எடுத்த செல்ஃபியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த செல்ஃபி தான் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
துபாயின் பட்டத்து இளவரசரின் பெயர் ஷேக் ஹாம்டன் பின் முகம்மது அல் மக்தூம். இவர் மிகவும் பிரபலமானவர். இருப்பினும், யாருமே யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். இளவரசரை ஒருவர் கூட அடையாளம் காணவில்லை. இந்த ஆண்டு யூகேவில் எனது கோடை சுற்றுலா என்று இளவரசர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் லண்டனின் சுரங்கப்பாதை ரயிலில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.
Also Read : சும்மாவே இருந்து சம்பாதிப்பது எப்படி? - இவரை பார்த்து தெரிஞ்சுகோங்க..
துபாய் இளவரசர் தனியாக பயணிக்கவில்லை. அவரது தந்தை மற்றும் வைஸ் பிரெஸிடெண்ட் மற்றும் துபாயின் தற்போதைய அரசரான ஷேக் முகமது பின் ரஷீத்தும் அவருடன் லண்டனில் பயணம் மேற்கொண்டார். மற்ற பயணிகளுடன் துபாய் இளவரசர் ஒன்றாக பயணித்தது இவருடைய பின்தொடர்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் யாருமே இளவரசர் இருப்பதை உணரவே இல்லை என்பதும் அதிர்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
View this post on Instagram
இளவரசர் ஷேக், “இன்னும் நிறைய நேரம் பயணிக்க வேண்டும், ஏற்கனவே இந்த இடம் போர் அடிக்கிறது” என்று கேப்ஷனுடன் UK பயணத்தில் வேறு சில புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
Also Read : ஒரே நிமிடத்தில் 17 அதிக காரமிக்க மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த நபர்..!
பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் வேறு நாடுகளில் பயணிக்கும் பொழுது மிகுந்த பாதுகாப்பும், பாதுகாப்பு படையும் உடன் வரும். ஆனால் துபாயின் பட்டத்து இளவரசர் அப்படி எந்தவித ஆரவாரமும் இல்லாமல், பாதுகாப்பு படையும் இல்லாமல், ஒரு சாதாரண பயணியாக லண்டனின் சுரங்கப்பாதை ரயிலில் பயணித்து அதைப் பற்றி வெளிப்படையாக பகிர்ந்தது பலரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.