• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பலூனை வெடித்த ‘புலி’ - வைராலான வீடியோவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

பலூனை வெடித்த ‘புலி’ - வைராலான வீடியோவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

பலூனை வெடித்த ‘புலி’

பலூனை வெடித்த ‘புலி’

குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்க இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவது சரியா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

  • Share this:
தான் எடுக்கும் வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். நிறைய புதுப்புது ஐடியாக்களை யோசித்து இணையத்தில் பதிவிடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் வைரல் வீடியோ கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. நம் நாட்டினை வைத்து ஒப்பீடு செய்யும் போது வெளிநாடுகளில் இதனை பொழுதுபோக்காக அதிகம் பேர் செய்து வருகின்றனர். வெளிநாட்டினர் விலங்குகளை செல்லப்பிராணிகளாக வீட்டிலே வளர்த்து வருகின்றனர்.

புலி ஒன்று பலூனை வெடிக்க வைப்பதாக இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 3 லட்சத்துக்கும் மேல் பார்க்கப்பட்டு வருகிறது. துபாயை சேர்ந்த ஒரு தம்பதியினர் பிரசவத்திற்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு எந்த குழந்தை பிறக்கப் போகிறது என்பதனை கண்டுபிடிக்க புலியை வைத்து பலூனை உடைக்க செய்கிறார்கள். புலி எந்த நிற பலூனை உடைக்கிறதோ அந்த குழந்தை பிறக்கும் என்று முடிவு செய்யலாம் என்று நினைக்கின்றனர். அவர்கள் வெளிட்ட வீடியோவில், புலி ஒன்று கருப்பு நிற பலூனை நோக்கி நடந்து வருகிறது.

கருப்பு மற்றும் வெள்ளை பலூன்கள் பறக்கிறது. அந்த பலூன்களில் வெள்ளை பலூனை அந்த புலி உடைக்கிறது. அந்த பலூனில் இருந்து இளஞ்சிவப்பு பொடி வெடிக்கிறது. இதனால் தங்களுக்கு பெண் குழந்தைதான் பிறக்கும் என்று பதிவிட்டுள்ளனர், அந்த தம்பதியினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவுக்கு ஆதரவாக சிலர் பதிவிட்டாலும், நெட்டிசன்கள் அனைவரும் இந்த வீடியோவுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்க இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவது சரியா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கார்லோட்டா காவல்லரி ‘பாலினத்தை கண்டுபிடித்து விட்டோம்’ என்று பகிர்ந்தார். இதில் நாங்கள் புலியை அச்சுறுத்தவில்லை, பலூன்களின் குப்பைகளையும் அகற்றிவிட்டோம். நாங்கள் தவறாக எதுவும் செய்யவில்லை என்று தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கியுள்ளனர்.

Also read... தனது வாயில் 6 டென்னிஸ் பந்துகள் வைத்து கின்னஸ் சாதனை படைத்த நாய்!

பிரபல இன்ஸ்டாகிராம் பக்கமான 'லோவின் துபாய்' மூலம் அந்த வீடியோ மீண்டும் பகிர, உலகம் முழுவதும் வைரலானது. புலி அதன் இருப்பிடமான காட்டில் இருப்பதுதான் சரியானது. புலியை வைத்து கீழ்த்தரமான செயல்களில் ஏன் ஈடுபடுகிறீர்கள் என்று பலரும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

இதுபோன்ற செயல்கள் ‘முற்றிலும் அருவருப்பானது. உயிரினங்களை தன் சொந்த காரியத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதால் துபாயில் தான் உயிரினங்களை காட்டில் விடாமல் செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்த்து வருகின்றனர். துபாயில் மட்டும்தான் இது நடக்கும்’ என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.ஒரு சிலர் இது போன்ற விஷயங்கள் சாதாரமானது என்றும் ஒரு சிலர் ஆதரவாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: