• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மனைவியின் பிறந்தநாளுக்கு ஆடம்பர காரை பரிசளித்த தொழிலதிபர்...!

மனைவியின் பிறந்தநாளுக்கு ஆடம்பர காரை பரிசளித்த தொழிலதிபர்...!

மனைவியின் பிறந்தநாளுக்கு ஆடம்பர காரை பரிசளித்த தொழிலதிபர்

மனைவியின் பிறந்தநாளுக்கு ஆடம்பர காரை பரிசளித்த தொழிலதிபர்

நம்முடைய பிறந்தநாளுக்கோ அல்லது ஏதாவது ஸ்பெஷலாகவோ நமக்கு ஒருவர் பரிசு தருவது சிறப்பான விஷயம். அந்த பரிசு சிறியதோ அல்லது பெரியதோ என்பதை பற்றி நமக்கு கவலை இல்லை.

  • Share this:
துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு பரிசாக 3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நம்முடைய பிறந்தநாளுக்கோ அல்லது ஏதாவது ஸ்பெஷலாகவோ நமக்கு ஒருவர் பரிசு தருவது சிறப்பான விஷயம். அந்த பரிசு சிறியதோ அல்லது பெரியதோ என்பதை பற்றி நமக்கு கவலை இல்லை. நமக்கு பிடித்தவர்களிடம் இருந்து ஏதோ ஒரு ‘பரிசு’ பெறுவதே நமக்கு மகிழ்ச்சியானது தான். அந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

அதுபோல தான் இங்கு தொழிலதிபர் ஒருவர், தன்னுடைய மனைவிக்கு அவருடைய பிறந்தநாளில் ரோல்ஸ் ராய்ஸ் காரை கொடுத்து அசத்தி உள்ளார்.‘பிசிசி குழு’ என்ற நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் அம்ஜத் சித்தாரா.துபாயில் உள்ள முக்கிய தொழிலதிபர்களில் இவரும் ஒருவர். அவர் தனது மனைவியின் 22வது பிறந்தநாளுக்கு பரிசாக 3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கொடுத்துள்ளார். இது ரோல்ஸ் ராய்ஸில் ரைத் ப்ளாக் பேட்ஜ் (Wraith Black Badge) ஆகும்.

இவரது மனைவி மர்ஜானா இவரது குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரியாக பணிபுரிகிறார். அம்ஜத் சித்தாரா தனது மனைவி மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு புதிய ஆடம்பர காரை பரிசளித்ததாகக் கூறப்படுகிறது. அம்ஜத் சித்தாராவும், மர்ஜானாவும் கேரளாவை சேர்ந்தவர்கள். இவர்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த ஆண்டு ஜூன் 4 அன்று, திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பிறந்துள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் பரிசளிக்க விரும்பிய அம்ஜத் சித்தாரா 3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக கொடுத்துள்ளார். அம்ஜத் சித்தாரா தீவிர ‘கார்’ ரசிகரும் கூட. இவர் ரேஞ்ச் ரோவர், பென்ட்லி, டொயோட்டா லேண்ட் க்ரூஸர், ஜீப் மற்றும் டாட்ஜ் போன்ற பிற ஆடம்பர கார்கள் மற்றும் எஸ்யூ கார் வகைகளையும் அவருடைய கேரேஜில் வைத்துள்ளார்.

Also read... மணமக்களை பின்னுக்கு தள்ளி கியூட்டாக போஸ் கொடுத்த ‘நாய்’- வைரலாகும் புகைப்படம்!

இதுகுறித்து பேசிய மர்ஜானா, ‘இந்த காரை எனது கணவர் எனக்கு பரிசாக கொடுக்க திட்டமிட்டுள்ளார் என்று எனக்கு தெரியாது. இது ஒரு பெரிய ஆச்சரியமாக இருந்தது. அவர் என்னையும், என் மகளையும் கார் ஷோரூமுக்கு அழைத்துச் சென்றார். அந்த இடம் முழுவதும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது நான் கனவுலகில் இருப்பது போலவே இருந்தது. இது என்னுடைய கனவு கார். இது அவருக்கும் தெரியும். ஆனால் அந்த காரை பரிசாக கொடுப்பார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை’ என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

அம்ஜத் சித்தாரா தனது மனைவிக்கு சொகுசு காரை பரிசளிப்பது இது முதல் முறை அல்ல. அவர் கடந்த ஆண்டு அவரின் மனைவிக்கு ‘மெர்சிடிஸ் இ-கிளாஸ்’ காரை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வாங்கியுள்ள இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில், நமக்கு ஏற்றவாறு வடிவமைத்து கொள்ளலாம். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தினை வெறும் 4.6 நொடிகளில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: