• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் செய்த டிஐஜி தந்தை - வைரலான புகைப்படம்!

டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் செய்த டிஐஜி தந்தை - வைரலான புகைப்படம்!

டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் செய்த டிஐஜி தந்தை

டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் செய்த டிஐஜி தந்தை

இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நெகிழ்ச்சியான புகைப்படத்தை இந்திய - திபெத் எல்லைக் காவல்படையின் (ITBP) இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

  • Share this:
சமீப காலமாக அடுத்த தலைமுறை அரசு அதிகாரிகளாக தனது பிள்ளைகள் தேர்வாகி வருவதை பல அரசு அதிகாரிகள் நேரில் கண்டு ஆனந்தம் கொள்கின்றனர். இதே போன்ற ஒரு நெகிழ்வான சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. அபெக்ஷா நிம்பாடியா என்கிற இளம்பெண் உத்தர பிரதேச மாநில காவல் துறையில் டிஎஸ்பி-யாக பொறுப்பேற்றுள்ளார்.

இவரின் தந்தை இந்திய - திபெத் எல்லைக் காவல்படையில் காவல்துறைத் துணைத்தலைவராக (டிஐஜி) பணியாற்றி வருகிறார். சமீபத்தில் உத்தர பிரதேச மாநில காவல் துறையில் டிஎஸ்பி-யாக பொறுப்பேற்ற அபெக்ஷா நிம்பாடியா தனது தந்தையான எபிஎஸ் நிம்பாடியா அவர்களுக்கு சல்யூட் செய்துள்ளார். அப்போது அதை பெருமையுடன் ஏற்ற அவரது தந்தையான டிஐஜி, தன் மகளுக்கு மீண்டும் சல்யூட் தெரிவித்தார். தன் மகளின் பட்டமளிப்பு அணிவகுப்பு விழாவில் இந்நிகழ்வு நடந்துள்ளது.

இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நெகிழ்ச்சியான புகைப்படத்தை இந்திய - திபெத் எல்லைக் காவல்படையின் (ITBP) இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் "தனது டிஸ்பி மகளுக்கு டிஐஜி-யாக இருக்கும் தந்தை பெருமையுடன் சல்யூட் செய்கிறார். அபெக்ஷா நிம்பாடிய, டிஸ்பி (உத்தர பிரதேச மாநில காவல் துறை) Dr. பி ஆர் அகாடெமி, மொராதாபாத். தந்தை - எபிஎஸ் நிம்பாடியா, டிஐஜி - இந்திய திபெத் எல்லைக் காவல்படை (A 3rd gen officer in Uniform) மற்றும் தாய் பிம்லேஷ் நிம்பாடியா ஆகியோரின் ஆசியை தனது பட்டமளிப்பு அணிவகுப்பில் அபெக்ஷா பெறுகிறார்" என்று அந்த புகைப்படத்தில் கேப்ஷனாக போட்டிருந்தனர்.



 




View this post on Instagram





 

A post shared by ITBP (@itbp_official)






இது நெட்டிசன்கள் இடையில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் இரண்டு புகைப்படங்களில், அபெக்ஷா தனது தாய் மற்றும் தந்தையுடன் நின்றபடி போட்டோவிற்கு போஸ் தருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்திற்கு 17,000 லைக்குகளுக்கு மேல் கிடைத்துள்ளது. சிலர் பெருமையுடன் பல கமெண்ட்கள் செய்துள்ளனர்.

அதில் ஒருவர் "என்ன ஒரு பெருமைக்குரிய தருணம்" என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் "ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் சிலர் நாட்டு பற்றுடன் கூடிய கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Also read... ஹைதராபாத் அருகே 1,100 ஆலமரங்களுடன் தீபாவளியை கொண்டாடும் மக்கள் - என்ன காரணம் தெரியுமா?

இதே போன்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. ஆந்திராவை சேர்ந்த காவல் ஆய்வாளரான ஒய்.ஷியாம் சுந்தர் என்பவர் தனது மகள் டிஎஸ்பி ஜெசி பிரசாந்தி அவர்களுக்கு மனதில் பெருமையுடன், நெகிழ்ச்சியாக சல்யூட் செய்த சம்பவம் அனைவரையும் உணர்வு பொங்க செய்தது.

இது போன்ற சிறந்த பிள்ளைகள் திருவள்ளுவரின் திருக்குறளான "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்" என்கிற குறளுக்கு ஏற்ப தனது பெற்றோர்களை பெருமை பெற செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: