போதையின் உச்சத்திற்கு சென்ற போலீஸ்... நிற்க முடியாமல் தரையில் தவழ்ந்து சென்ற காட்சி

மதுபோதையில் இருந்த காவலரை இளைஞர் ஒருவர் சாலையோரமாக அழைத்துவந்த போது, நிலைத் தடுமாறி கீழே விழுந்து, குழந்தையை போல தரையில் தவழ்ந்து தவழ்ந்து சென்றார்.

Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 5:52 PM IST
போதையின் உச்சத்திற்கு சென்ற போலீஸ்... நிற்க முடியாமல் தரையில் தவழ்ந்து சென்ற காட்சி
மதுபோதையில் இருந்த காவலர்
Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 5:52 PM IST
மகாராஷ்டிராவில் மதுபோதையின் உச்சத்திற்கு சென்ற காவலர் நிற்க முடியாமல் தரையில் தவழ்ந்து சென்ற காட்சி வெளியாகி உள்ளது.

நாக்பூரில் உள்ள காவல்நிலையம் பணிபுரியும் காவலர், மது அருந்திவிட்டு ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டியுள்ளார். மதுபோதை தலைக்கேறியதால் நிற்க முடியாமல் இருந்த அந்த காவலர், இருசக்கர வாகனத்தை சாலையோர தடுப்பு மீது மோதி நின்றார்.

அவரை இளைஞர் ஒருவர் சாலையோரமாக அழைத்துவந்த போது, நிலைத் தடுமாறி கீழே விழுந்த காவலர், குழந்தையை போல தரையில் தவழ்ந்து தவழ்ந்து சென்றார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

வீடியோ: 

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...